திருக்குறள்
– சிறப்புரை :542
வானோக்கி வாழும்
உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி
வாழும் குடி
. ------- ௫௪௨
உலகில் வாழும் உயிர்கள்
எல்லாம் கதிரவனையும் கார்மேகத்தினையும் சார்ந்தே உயிர்த்தெழுந்து வாழ்கின்றன அதைப்போல
முறைசெய்து காப்பாற்றும் மன்னவனின் செங்கோல் நிழலில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
உலக உயிர்கள் : இயற்கையின் ஆட்சியிலும் செயற்கையின் (மன்னனின்) ஆட்சியிலும்.
வாழ்வு பெறுகின்றன.
“
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்
அன்னோன் வாழி வென்வேற் குருசில்.”
பொருநராற்றுப்படை.
அறத்தொடு பொருந்திய வழிகளை
அறிந்துகொள்வதற்குக் காரணமான செங்கோல் உடைய, வெல்லும் வேல் படைக்குத் தலைவனாகிய கரிகால்
பெருவளத்தான் இனிது வாழ்வானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக