திருக்குறள்
-சிறப்புரை
:1098
அசையியற்கு
உண்டாண்டோர்
ஏஎர்யான்
நோக்கப்
பசையினள்
பைய
நகும். ---- ௧0௯௮
( உண்டு ஆண்டு ஓர்; அசை இயற்கு )
நான் அவள் அருள்வேண்டி
இரந்து பார்த்தபோது அவளும் அன்பும் இரக்கமும்
கொண்டு, மெல்ல நகைத்து நின்றாள் ; அசையும் மயில் போன்ற சாயலையுடைய
இப்பெண்ணிற்கு
அந்த நகைப்பு, உடன்படும் நல்ல குறிப்பு
என்பதை உணர்ந்து
கொண்டேன்.
“நயனுன் நண்பும் நாணும் நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்…..” -----
நற்றிணை.
குவளை மலரின் பிணையலைப்
போன்றது, செவ்வரி பரந்து மதர்த்து
விளங்கும்
இவளுடைய கண்கள் ; அக்கண்களை
யான் காணும் முன்பாக என்னிடம் …; யாருடனும் நெருங்கிப்
பழகும் உறவும் சுற்றம் தழுவலும்
நட்பும் நாணம் நன்குடைமையும்
பிறர்க்கு
உதவும் பயனறிதலும்
நன்னெறிக்கண்
படரும் பண்பும் உலக நடையறிந்து
ஒழுகும் பாங்கும்
நும்மைவிடச்
சிறந்திருந்தன,’இப்போது இவள் கண்களைக்
கண்ட பின்னர் அவையாவும்
எம்மிடம்
இல்லையாயின. – இனி எல்லாப் பண்புகளும்
இவள் பொருட்டாயின என்றனன்.என்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக