திங்கள், 14 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1106


திருக்குறள் -சிறப்புரை :1106

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.---- ௧௧0.

இவளோடு கூடிக்களிக்கும் தோறும் என் உயிர் செழிப்பதால் இவளுடைய தோள்கள் அமிழ்தத்தால்  செய்யப்படனவாதல் வேண்டும்.

புல்லென் மாலையும் இனிது மன்றம்ம
நல்லக வனமுலை அடையப் புல்லுதொறு
உயிர்குழைப்பு அன்ன சாயல்
செயிதீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கு.” ---அகநானூறு.

நல்ல மார்பகத்தே உள்ள அழகிய முலையைப் பொருந்தப் புணருந்தொறும் உயிர் குழைவது போலும் மென்மை வாய்ந்த  குற்றமற்ற இனிய துணைவரைக் கூடியிருப்போர்க்கு, பொலிவுபெற்ற  இம் மாலைப் பொழுதும் உறுதியாக இனிதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக