தமிழமுது
–169 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 29.
தமிழால் வீடுபேறு
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
”எது செழுந்தமிழ் வழக்கு…?” பண்ணோடு கலந்த பைந்தமிழை இசையோடு
கலந்த இன்பத்தமிழை வெறுத்து ஒதுக்காமல் வாழ்நெறிமுறைப்படி வாழச்சொன்னது தமிழ்நெறி.
தொன்மையான நம் தமிழ்மொழி எழுத்துக்களின் கூட்டம்
அல்ல ! சொற்களின் குவியல் அல்ல ! ஒலிகளின் முழக்கம் அல்ல ! வாழ்க்கையின் வடிவம் நம்
அன்னைத் தமிழ்மொழி. எழுத்துக்கும் சொல்லுக்கும்
இலக்கணம் பேசிய மொழிகளுக்கு நடுவே வாழ்க்கைக்கு இலக்கணம் பேசியது நம் அருமைத்
தமிழ் மொழி !.
குழந்தையின் அழுகை, தாயின் தாலாட்டு முதல் கல்லறையின் கண்ணீர்த்துளிகள்
வரை விழி எனும் மொழியின் ஒலிதானே !
“ கருத்துக்கள் பேசினால் உரைநடை !
கற்பனை பேசினால் கதை !
உணர்ச்சிகள் பேசினால் கவிதை !
ஒப்பனை பேசினால் ஓவியம் !
நளினங்கள் பேசினால் நாட்டியம் !
நடிப்பு பேசினால் நாடகம் !
உயிரின் துடிப்பு பேசினால் தாயின் மொழி அன்றோ!
அதுவே தாய்மொழி அன்றோ !
ஐயிரு திங்கள் குருதிக் குளத்தில் குளித்து உயிரைத்
தந்தவள் தன் உயிர்த்துடிப்பு அன்னை மொழியாகும் !”
சீர்காழிப்பதியில் திருத்தோணிப்புரத்துக் கரையில்
அழுத குழந்தைக்கு உலகத்தின் அன்னை, நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்த பேரன்புடன்
ஞான அமுதை ஊட்டினாள்.
அழுத குழந்தை மொழிந்த மொழி எல்லாம் தேனார் தீந்தமிழ்
விருந்து ! “எனதுரை தனதுரை” என்று அந்த ஞானக் குழந்தை பிரகடனம் செய்தது ! “தான் மொழிவது
எல்லாம் இரைவனின் வாக்கே” என்று ஞானக் குழந்தை தெய்வக்குரலாய் ஒலித்தது !
தடுமாறி நின்ற மானுடத்தை நெறிப்படுத்தவும், சரிப்படுத்தவும், வழிப்படுத்தவும், “ஆணை நமதே” என்று
நம்பிக்கையுடன் பிரகடனம் செய்தது. செழுந்தமிழ் வழக்கு அயல் வாழ்க்கை வென்று எடுத்த
பெருமை அந்த ஞானக்குழந்தை ஞானசம்பந்தப் பெருமானுக்கே உண்டு ! ஞானசம்பந்தர் திசை அனைத்தின்
பெருமை எல்லாம் தென் திசையே வென்று ஏறச் செய்தார்.
நிலையாமை என்பது…………………….தொடரும்………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக