திங்கள், 20 ஏப்ரல், 2015

தமிழிசை - 2

தமிழிசை
நல் இசை நிறுத்த நயவரு பனுவல்
தொலிசை நிறீஇய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணின் உள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே
                       அஞ்சியத்தை மகள் நாகையார்,அகம்.352:13-17
 நல்ல இசைகளை வரையறை செய்த இனிமைமிக்க நூலின், எண்ணின் முறைப்படி இயற்றிய பண்ணைக் காட்டிலும் பாணன் புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டிலும்  திருமணம் புரிந்த நாளினும்  இனியனாக உள்ளான்- என்றாள் தலைவி
நயவரு பனுவல் - இசைத்தமிழ் நூல்
எண்ணுமுறை நிறுத்த - அலகு முறைப்படி அமைந்த
அலகு - சுருதி
பண்களுள்ளே எழு நரம்பால் இயன்றது பண் எனவும் ஆறு, ஐந்து, நான்கு எனக் குறைந்தநரம்புகளால் இயன்றது திறம் எனவும் படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக