வியாழன், 23 ஏப்ரல், 2015

பறவைகளின்....

பறவைகளின்பாதுகாவலன்

 ஆஅய் எயினன் வீழ்ந்தென ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூர ஆடி மொசிந்துடன்
-                   பரணர், அகநா. 181:7 – 10
மிஞிலியுடன் போரிட்டு ஆஅய் எயினன் களத்தில் மாண்டான்.( காண்க அகம்.142)எயினன் பறவைகளின் பாதுகாவலன் ஆதலால் பறவைகளின் பெருங் கூட்டம் ஞாற்றின் ஒளிபொருந்திய கதிர்களின் வெப்பம் அவன் உடலில் படாது மறைப்பதற்காக வானத்தில் ஒன்றுகூடி வட்டமிட்டன.
கிளிகள் கொணர்ந்த உணவு
உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
நிரைபறைக் குரீஇயின்ங் காலைப் போகி
முடங்குபுறச் செந்நெற் றரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்பினவாகிப் பொழுதுபடப்
படர்கொண் மாலைப் படர்ந்தாங்கு
                    ஒளவையார், அகநா.303 : 10 -14
உரைத்தல் அமைந்த  வளவிய புகழினையுடைய பாரியினது  பறம்பு அரணில் வரிசையாகப் பறத்தலயுடைய  குருவியின் கூட்டம் காலையில் புறம் போய்வளைந்த புறத்தினையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொணர்ந்து தருமாறு ஒருங்கே அந்நெற்கதிருள்ள இடத்தை ஆராய்ந்து திரிதலையுடையனவாகி, ஞாயிறு மறைய துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதில் மீண்டு வந்தாற்போல.
                       பரியின் பறம்பு அரணி மூவேந்தரும் முற்றியிருந்த பொழுது, அகத்திருப்பார் உணவின்றி வருந்தாவாறு, கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் கிளிகளை வளர்த்து வெளியிலிருந்து கதிர்களைக் கொண்டுவரச் செய்தனர் என்பது வரலாறு. இதனைஉலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிச வாய் மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று, செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு ….. வேந்தர் ஓட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரிஎன்பதனாலும், கபிலன் சூழ என்றது பாரியை அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து உணவில்லாமைக் கிளிகளை வளர்த்துக் கதிர் கொண்டுவர விட்ட கதை என்ற அதன் பழைய உரையினாலும் அறிக. நாட்டார் உரை.- பாலை


Pet Parrot helps Agra police arrest killer of its owner
Neelam, wife of Vijay Sharma, the editor of a Hindi daily, was found murdered at her residence on Feb.20. Her husband noticed a change in the behavior of the parrot whenever his nephew Ashutosh visited their houseafter the murder. During discussions too, whenever  Ashutosh’s name was mentioned, the parrot would start screeching. This raisedmy suspicion and I informed the police “, said Sharma.
SSP Agra, Shalabh Mathur, said that Ashutosh has confessed to the crime.
 “’ we checked his call details and took him in custody. He accepted his crime and informed us that he was accompanied by an accomplice. They had entered  the house with the intention of taking away cash and other valuables.”, he said. Afraid that his aunt might recognize him, he stabbed her and the dog when it started barking. But he hadn’t accounted for the parrot who was watching, TOI- 27-02-14


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக