யாழ்
யாழ் நான்கு வகைப்படும் - பேரியாழ்,மகர யாழ், சகோட யாழ்,
செங்கோட்டி யாழ்.
பேரியாழ்
பின்னு மகரம் சகோடமுடன்
சீர்பொலியும்
சென்ங்கோடு செப்பினர் தார்பொலிந்து
மன்னுந்
திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னும்
உளவே பிற. ( பழைய
வெண்பா)
பேரியாழுக்கு
21 நரம்புகள், மகரயாழுக்கு 19 நரம்புகள், சகோடயாழுக்கு 14 நரம்புகள்,
செங்கோட்டியாழுக்கு 7 நரம்புகள்.
ஒன்றும் இருபதும் ஒன்பதும் பத்துடனே
நின்ற பதினான்கும் பின்னேழும் குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக