குடவோலை
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்
மருதனிளநாகனார், அகநா. 77: 7,8
கயிற்றால்
பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு, அக்குடத்தின் மேலிட்ட
இலச்சினையை ஆய்ந்து நீக்கும், அவ்வோலையைத் தேரும் மாக்கள் அவையிற்றை வெளியே
ஈர்த்தெடுத்தல் போல.( ஊராண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற்
பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின் கட்
போட்ட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர்முன் குடத்தின்மேலிட்ட இலச்சினையைக்கண்டு, நீக்கி
உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென்ன முடிபு செய்வதோர்
வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை என்று கூறப்படும்.பழைய கல்வெட்டுக்களில்
இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.-நாட்டார்)
(
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக