தமிழமுது
–153 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 13.
பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.
பாட்டு வடிவமும்
உள்பொருள் உணர்வும் :
புறநானூற்றுப் பாடல்கள் தன் முன்னேற்றம், தன்னம்பிக்கை, பெருமித
வாழ்வு, நிலைத்த உண்மைகள், மெய்மைத் தத்துவச் சிந்தனைகளின் கொள்கலமாக உள்ளன. தொடித்தலை
விழுத்தண்டினார், முதுமையில் தம் இளமையை எண்ணிப்பார்க்கிறார். இனி நினைந்து இரக்கமாகின்று
என்று தொடங்குகிறார். எது?
நெடுநீர்க்
குட்டத்துத் துடும் எனப் பாய்ந்து குளித்து மணற்கொண்ட கல்லா இளமை மன்னா உலகத்து மன்னுதல்
குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே. உண்பது நாழி; உடுப்பவை இரண்டே, பிறவும்
எல்லாம் ஓரொக்கும்மே, தமக்கென முயலா நோன்தாள். பிறர்க்கென முயலுநர் உண்மையான் உண்டாலம்ம
இவ்வுலகம். உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.
எவ்வழி ஆடவர் நல்லவர் அவ்வழி வாழிய நிலனே (ஒரு
பெண்ணின் குரல்). ஒரே தெரு, முதல் வீட்டில் மணம்; அதே தெருவில் கடைசி வீட்டில்
மரணம். இப்படிப் படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்! ஆகவே, இன்னாது மன்ற இவ்வுலகம் ; ஆனாலும்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே – நம்பிக்கை ஊட்டுகிற நல்ல மனம். நாட்டை ஆள வருவது
தாமும் தம் உறவுகளும் செல்வர்களாகவா? தன்னல நோக்கமா?.
“மழை வளங் கரப்பின் வான்பேர் அச்சம்
பிழை உயிர் எய்தின்
பெரும்பேர் அச்சம்
குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் குடிப் பிறத்தல்
துன்பமல்லது அது தொழுதகவு இல்லை.” (சிலம்பு)
வாழ்க்கைக்கு சாதுரியம், திறமை மட்டும் போதாது.
மதலையாம் சார்பும் வேண்டும் காற்றாற்றில் தெப்பம் போலத் தான் வாழ்க்கை. காற்றடிக்கும்
திசை அல்லது நீரோடும் வழியில் போகிறது. இவ்வுலகில் சாவது ஒன்றும் புதியதன்று நாளும்
நடப்பதே அது. உனக்கு நீயே துணை. தீதும் நன்றும்
பிறர் தருவதில்லை . உலகிடைப் பிறந்த எவரும் சமமானவரே . சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறுபடுத்துகின்றன.
அதனால், பெரியோரை வியத்தலும் இலம் ; சிறியோரை இகழ்தல் அதனினும் இலம்.
”சங்க இலக்கியத்தின் செவ்வியற் பண்புகளை” எழுதிப் பார்ப்பதைவிட வாழ்ந்து பார்ப்பது உலகை உயர்த்தும்.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No:
0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD
………………………. தொடரும்…………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக