தமிழமுது
–156 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை – 16.
தமிழிசை.
முனைவர் ராம. கெளசல்யா.
உலக இசை வரலாற்றில் ஞானசம்பந்தர்தான் வயதில் மிகவும் குறைந்த
இயலிசைப் புலவர் ஆவார். இவர் தமது முதல் பதிகமான தோடுடைய செவியனைப் பாடியபோது இவருக்கு
வயது 3.
தேவாரப்
பதிகங்கள் பாடப்பட்டபோது நிலவிய இசைமுறை பண்முறையாகும். இப்பதிகங்கள் ஓதும் முறையைக்
காப்பாற்றி நமக்குத் தந்துள்ள ஓதுவாமூர்த்திகள் வணக்கத்துக்குரியவர்கள். இவற்றின் தாளம்
குறித்த செய்திகள் கிடைக்கவில்லை. பண்கள் குறித்த செய்திகளிலும் இன்னும் ஆய்வு செய்யவேண்டியவை
உள்ளன. 103 பண்களில் 23 பண்களே தேவாரப் பதிகங்களில் இனம் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள்ளும்
ஒரே பண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ராகங்களும் பல பண்களுக்கு ஒரே ராகமும் சுட்டப்படுகின்றன.
சைவ சமய பக்திப் பாடல்களான தேவாரப் பதிகங்கள் போன்றே வைணவ சமய
பக்திப்பாடல்களான திவ்வியப்பிரபந்தப் பாசுரங்களும் பண்முறையில் பாடப்பட்டவையாகும்.
ஆனால், காலந்தோறும் ஏற்பட்ட பல்வேறு சூழல்களால்
இவை பாடப்பட்ட பண்கள் மறைந்து, இன்று
ஒரு வகையான ஓதும் முறையில் ஓதப்படுகின்றன. பாட விரும்புவோர் தங்கள் மனநிலைக்கு ஏற்ப
இசையமைத்து இவற்றைப் பாடுகின்றனர், இவற்றிற்குத் தாளம் குறிக்கப் பெற்றிருந்தும் அவை
மறைந்துவிட்டன.
………………………. தொடர்கிறது…………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக