தமிழமுது
–155 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 15.
தமிழிசை.
முனைவர்
ராம. கெளசல்யா.
பரிபாடல் போன்ற பல இசைவடிவங்கள் இன்றைய கிருதி, பதம் போன்றவைபோல்
பிரபலமாக இருந்திருக்கின்றன.பரிபாடல் என்னும் வடிவம் இலக்கணம் கூறும் அளவிற்கு ஏராளமாக
வழக்கில் இருந்த்ருக்கிறது. 25 அடிமுதல் 400 அடிவரை இவை இருந்திருக்கின்றன என்று கூறும்போது
இவற்றை எப்படிப் பாடி இருப்பார்கள் என்று திகைப்பாக இருக்கிறது.
தற்போது கிடைக்கின்ற பரிபாடல்களின் இறுதியில்
பாடியோன், இசை வகுத்தோன், பண் ஆகிய செய்திகள் தரப்பட்டாலும் பாடும் முறை தெரியவில்லை.
கலிப்பாவின் நிலையும் இத்தகையதே. இதேபோல பண்ணத்தி என்பதும் என்ன என்றே புரியவில்லை.
சிலப்பதிகாரத்தில் காணப்படும் வாழ்த்துப்பாடல்கள் பலவகைப்பட்ட வரிப்பாடல்கள் குரவைப்
பாடல்களையும் பாட வேண்டிய அக்கால முறை தெரியவில்லை.
இன்றைக்குப் பாடப்படுகின்ற பாடல் வடிவங்களுள் இசையோடு கிடைக்கின்ற
பழைய வடிவம் தேவாரம் தான். இவற்றைப்பாடிய திருஞானசம்பந்தர்
(கி.பி 7ஆம் நூற்றாண்டு), திருநாவுக்கரசர் (7ஆம் நூற்றாண்டு), சுந்தரர் (8ஆம் நூற்றாண்டு)
மூவரும் தலங்கள்தோறும் சென்று பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டனர். பக்தியோடு தமிழையும்
, இசையையும் வளர்த்தனர். இந்திய பக்தி இயக்கத்தையும் இவர்களே தொடக்கிவைத்தனர்.
…………………………………………………………….
பெண்ணின் பாட்டு
பொதுப்படையாகப் பார்க்குமிடத்து, நமது மாதர்
பாட்டுகளின்
இனம் பின்வருமாறூ:
1.
கல்யாணப் பாட்டு,
நலங்கு, பத்யம், ஊஞ்சல்,
ஓடம் முதலியன.
2.
கும்மிப் பாட்டு,
குதித்துப் பாடுகிற பாட்டுகள்
இவ்வகுப்பில் கிளிப் பாட்டு, பல்லிப் பாட்டு
முதலியனவும் அடங்கும்.
3.அம்மானை , தூது, மாலை, சோபனம் முதலிய
நீண்டகதைப் பாட்டுகள்.
4.பொதுத் தாலாட்டு, விளையாட்டுப் பாட்டுகள்
ஜாவளிகள், கீர்த்தனை முதலியன.
மேலும் பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள்
நெல் குத்துவோர், சுண்ணாம்பு இடிப்போர், குறிகாரி,
தொம்பச்சி முதலிய வகுப்பினர் தமக்கென்று தனியான
மெட்டுகள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மேற்
கூறப்
பட்ட பாட்டுகளில் மிக இன்பமான சந்தங்கள் இருகின்றன.
இவை கால வெள்ளத்தில் மறைந்துபோகுமுன்பாக
ஸங்கீத வித்வான்கள்
பொறுக்கியெடுத்து
ஸ்வர நிச்சயம் செய்து வித்தைப் பழக்கத்திலே
சேர்த்துவிட வேண்டும்.
– பாரதியார்.
……………………………………………………
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No:
0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD
………………………. தொடரும்…………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக