வியாழன், 16 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 124.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 124.. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்- திருமூலர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

மூச்சுப் பயிற்சி :

 

 “மூச்சுப் பயிற்சி உயிருக்குத் தேர்ச்சி “ என்பர் சான்றோர்.

 சோம்பல் மிகவும் சுகமானதுதான் ; ஆனால் அதுவே மிகவும் ஆபத்தானது. எந்திரமயமான இவ்வுலகில் தந்திரம் எனும் தன் திறம் அறிந்து வாழ்தல் நன்று. நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை. ஆயுனும் அதற்குத்தக்கவாறு உடலைப் பேணுதல் நன்று  ;இல்லையேல் பருவத்திற்குரிய பயன்களை நுகர முடியாமல் வாழ்க்கை, பிறர் தோள் கடுக்கும் சுமையாகிப் போகும்.  உடலை உள்ளத்தையும் சீர்படுத்த கற்றே ஆக வேண்டும்.

ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிப்பது அறிவியலா..? நோய்கள் அண்டவிடாமல் வாழக் கற்பது அறிவியலா..?

 

“ மூச்சை ஒழுங்காக விடுவதற்கே சோம்பல் பட்டால் உங்கள் மூச்சே அதிரடி நோய்களைக் கொடுத்து, அனுபவியடா அனுபவி என்று ஈவு இரக்கம் இல்லாமல் உங்களைத் துன்புறுத்தும்.”

 

உன்னை நீ ஓதி உணர்வாய் என்பது மந்திர மொழி.

 “ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்

காற்றைப் பிடிக்கும்  கணக்கு அறிவாரில்லை

காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்

கூற்றை உதைக்கும் குறியது வாமே” என்கிறார் திருமூலர்.

 

 மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கும் கணக்கை முறைப்படிக் கற்றுக்கொண்டு நாள்தோறும் பயிற்சி மேற்கொண்டால் எமனையே எட்டி உதைக்கலாம் என்கிறது திருமந்திரம்.

 

ஐயா, மறைமலை அடிகளார் எழுதிய ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை’ நூலைக் காண்போம்.

 

 “நுரையீரலின் முழுப்பாகமும் அசைந்து உயிர்க்காற்றை இழுத்து நிரப்பி வெளியிடுமானால் நமது உடம்பிற்கு நோயே வராது. நம் முன்னோர்கள் இருந்த காலத்தில் அவர்களின் மார்பினுள்ளே இருந்த இந்த உறுப்பின் முழுப்பாகமும் அசைந்து கொண்டே இருந்தது, இந்தப் புது நாகரிக காலத்திலோ என்னவென்றால் மக்களிற் பெரும்பாலார்க்கு இந்த உறுப்பு முழுவதும் அசைவதே இல்லை, காற்பங்கோ, அரைக்காற்பங்கோ தான் அசைந்து வருகின்றது. அதற்கு ஏது என்னென்றால் தூய உயிர்க்காற்று நிறைந்து நிற்கும் இடங்களில் நாம் அக் காற்றை  மிகுதியாக உள்ளிழுக்க, நுரையீரலானது அவ்வளவு காற்றுக்கும் இடம் கொடுத்து அகன்று முழுமையும் அசைகின்றது.” (ப.26.)

 

இதனால் காற்றுப்பையே கடவுளாக எண்ணத் தோன்றுகிறதல்லவா..? விதியை மதியால் வெல்வார்க்குக் காலன் கயிற்றோடு வருவதில்லை..  

நூறாண்டுகள் வாழ உதவும் மூச்சுப் பயிற்சியை அரிய அறிவியல் கருவூலமாகத் திகழும் திருமந்திரத்தில்…

“ தலைவன் இடம் வலம் சாதிப்பார் இல்லை

…………………………………..

 

.…………சித்தர்கள்..…திருமூலர்..…….தொடரும்…………

 

புதன், 15 ஜனவரி, 2025

பொங்கல் சிறப்பு மலர் .

 

பொங்கல் சிறப்பு மலர் .

 தமிழ் மொழியின் சிறப்பினை நாவலர் பலவாறாக விளக்கியுள்ளார். தமிழானது பகுத்தறிவுடைய மக்கள் முதலிய உயிரை உயர்திணை என்றும் பகுத்தறிவில்லாத உயிரையும் உயிரில் பொருளையும் அஃறிணை என்றும் அறிவு பற்றிப் பாகுபாடு செய்திருப்பதுபோல வடமொழி செய்யவில்லை. வேறு எம்மொழியும் செய்யவில்லை. இவ்விருவகைப் பெயர்களே தமிழ் மக்களின் உயரிய அறிவையும் கொள்கையையும் தமிழின் தனி மாண்பினையும் விளக்கப் போதியனவாகும்.”  (நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாட்டாரியம் ப.81.)

தமிழர் வழிபாடு:

புறநானூற்றிற் கண்ட சில பழைய வழக்குகளும் வரலாறுகளும்என்ற ஆய்வுக்கட்டுரை பழந்தமிழர்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கைகளை விவரிப்பதோடு போரில் சிறந்தவர்களுக்குச் செய்யும் சிறப்புகளையும் பட்டியலிடுகின்றது.  மேலும்  மழைவரத்துக் குறித்த நம்பிக்கையையும் தெய்வமுறையும் இடங்கள் குறித்த மக்களின் நம்பிக்கையையும் இலக்கிய மேற்கோள்கள் வழியாக நாவலர் விளக்கியுள்ளார். நன்னாளில் கதிர் கொய்து வந்து புதிது உண்டல், நீர் விளையாட்டு, மழக்கான மக்களின் வழிபாடு, புலி இடப்பக்கத்து வீழ்ந்த விலங்குகளை உண்ணாது என்னும் கருத்து, செத்தோரைப் பேராந்தை அழைக்கும் என்பது ஆகிய நம்பிக்கை வழக்காறுகளை விளக்கியுள்ளார்.” (மேலது. .92.)

 

பொங்கல் திருநாள்.

நன்னாளில் கதிர் கொய்து வந்து புதிது உண்டல்;

நல்நாள் வருபதம் நோக்கிக் குறவர்

உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறுதினை

முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார். ”(கதம்பிள்ளைச் சாத்தனார். புறநானூறு, 168. 5-7.)

நல்நாள் நோக்கிக் குறவர்,விதைத்தற்கும் விளைந்த கதிர்களைக் கொய்து உண்பதற்கும் நல்ல நாள் பார்ப்பது  பண்டைத் தமிழரின் வழக்கமாகும், இதனை நன்னாள் வருபதம் நோக்கி என்றும் நல்லநாள் பார்த்து , சிறுதினை முந்து விளைந்த புதிய தினை அரிசியைக் கொணர்ந்து உண்பர்.

சருக்கரைப் பொங்கல்:

செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை

மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு

இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்

விளைகழை பிழிந்த அம்தீம் சேற்றொடு

பால்பெய் செந்நெல் பாசவல் பகுக்கும்” (தாயங்கண்ணனார், அகநானூறு, 237. 8 -12.

சிவந்த தீயில் சுட்ட கொழுத்த வளம் பொருந்திய கறித்துண்டுகளை மெல்லிய தினைச் சோற்றில் சொரிந்த உண்கலத்தோடு, முற்றிய கருப்புச் சாறாகிய பாகுடன்  பால் கலந்து பசிய செந்நெல் அவலைத் தன் சுற்றத்தாரோடு பகிர்ந்துண்ணும் வளமுடைய உறையூர்.

புதிது உண்ணல் இன்று நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளாகும்.

உழவர் திருநாள் :

பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் என்னும் புலவர் என்னும் புலவர் பின்வறுமாறு அறிவுறுத்துகின்றனர். “ கடல் சூழ்ந்த உலகம் முழுவதையும் தமது முற்சியால் கைக்கொண்டு புகழை உலகத்தில் நிறுத்தி ஆட்சிபுரிந்த  வலியோரிடைய வழியில் வந்தோனே! நீ மறுமை உலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினும், ஏனை மன்னரை யெல்லாம் வென்று நீயே தலைவனாதலை விரும்பினும், நல்ல புகழை இவ்வுலகத்தே நிலை பெறுத்தலை விரும்பினும் அதற்குத் தக்க செய்கையைக் கேட்பாயாக, உடம்புகளெல்லாம் உணவை நிலைக்களனாகவுடையன ; ஆதலின் நீரை இன்றியமையாத அவ்வுடம்புக்கு உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே ; அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள்  இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர் ; விதையை விதைத்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் புன்புலம் எத்துணை இடமகன்றதாயினும் அது அரசனது முயற்சிக்குப் பயன்படாதது ; ஆதலின்  இவ்வுண்மையைக் கடைப்பிடித்து, ஏரி, குளம் முதலிய நீர்நிலைகள் மிகும்படி செய்தோரே மறுமைச் செல்வம்  முதலிய மூன்றினையும் தம் பெயருடன் இவ்வுலகத்தில்  இசையச் செய்தோராவர்.” ((மேலது. .518புறநானூறு -18. )   

உழவர் பெருமை:

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதுஆற்றாது

எழ்வாரை எல்லாம் பொறுத்து. குறள் -1032.

 உழுதொழில் செய்யமாட்டாது பிற தொழில்களை மேற்கொள்வோர் யாவரையும் காப்பாற்றும் வல்லமை உடைய உழவர் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்.

 

‘ இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்

 உழவிடை விளைப்போர் ….. (சிலப்பதிகாரம்- 10;)

 இரந்து வாழ்வோர் சுற்றமும்  அவர்க்குப் பொருள் கொடுத்துப் பாதுகாக்கும்கொற்றமும் உழவர் நிகழ்த்தும் உழவுத் தொழில் வழியே சிறப்படையும்.

ஓத்திர நெல்:

ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி

மாய வண்ணனை மனன் உறப் பெற்று

ஓத்திர நெல்லின் ஓகந்தூர் ஈத்து… (பதிற்றுப்பத்து.)

பல யாகங்களையும் பெரிய அறச் செயல்களையும் செய்து முடித்தவன் சேரன் வாழியாதன் . கரிய நிறமுடைய திருமாலைத் தன் மனத்துப் பொருந்தப் பெற்றவன். அத்தெய்வத்திற்கு ஓத்திர நெல் என்னும் ஒருவகை உயர்ந்த நெல் விளையும் ஓகந்தூர் என்னும் ஊரினைக் கொடையளித்தவன். ( ஓத்திர நெல் – இராச அன்னம் ; இந்நெல் ஒரு பறவையின் பெயர் பெற்றதாம் ; இதனை மின்மினி நெல் என்றும் கூறுவர்.)

ஏறுதவுதல் :

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆயமகள் . “ கலித்தொகை- 103.

கொல்லுகின்ற கொம்பினையுடைய  காளையைக் கண்டு அஞ்சுகின்ற ஆண்மகனை  மறுபிறப்பிலும் தழுவி மகிழ விரும்ப மாட்டாள்.

(ஏறு தழுவுதல் , முல்லை நிலத்தின் வீர விளையாட்டு ;   ஏறு தழுவிய பின்னர்க் குரவைக் கூத்து நிகழும் ; தெய்வ வாழ்த்தும் இடம் பெறும்.)

தொல்பழங்காலந்தொட்டே ஏறுதழுவுதல் நிகழ்ந்துவருகிறது. இவ்வீர விளையாட்டு சிந்து வெளி மக்களிடையே இருந்ததாக அங்கு அகழாய்வில் கிடைத்த முத்திரை ஒன்றால் அறியப்படுகிறது.

………………சித்தர்கள் ………..திருமூலர் ……தொடரும்….

திங்கள், 13 ஜனவரி, 2025

பொங்கலோ…….பொங்கல்….! உலகத் தமிழ் ஆர்வலர் அனைவருக்கும் களப்பாள் வலைப்பூ வழங்கும் வாழ்த்து மடல் .

 பொங்கலோ…….பொங்கல்….!

 உலகத் தமிழ் ஆர்வலர் அனைவருக்கும் களப்பாள் வலைப்பூ வழங்கும் வாழ்த்து மடல் .  

’திரை கடலோடி திரவியம் தேடி;  கூடி மகிழ்வோம்  ; தமிழர் திருநாளைக் கொண்டாடிப் போற்றுவோம்.

       தமிழ்ப் புத்தாண்டில்  தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் இல்லம்தோறும் நலம் சிறக்க, வளம் செழிக்க உற்றார் உறவினரோடு கலந்தினிது மகிழ்ந்து  வாழ்வாங்கு வாழ , இயற்கை அன்னையை இருகரம் கூப்பி வேண்டி, நண்பர்கள் அனைவருக்கும்  மனங்கனிந்த இனிய வாழ்த்துக்கள்.

  வாழிய நன்றே …. வாழிய நன்றே…வாழிய நன்றே….!

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 123.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 123.. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்- திருமூலர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.


 தியானம் ;

கண்களை மூடி, மனத்தை ஒருநிலைப்படுத்தி அமைதியாக இருந்து "ஓம்" என்னும் மந்திரத்தை உள்ளுக்குள் ஒலித்தலே ‘தியானம் ‘.   மனம் தெளிவடையும் உடல்நலம் சீராகும் உயிர் வளம் பெறும் வாழ்க்கையில் அச்சம் அகலும். அஃதாவது ‘மரண பயம்’ விலகும்.

 

தியானப் பயிற்சி :

“கொப்பூழுக்குப் பன்னிரண்டு விரல் அளவில் கீழுள்ளது மூலாதாரம். அம்மூலாதாரத்தைத் தூண்டித் தொழிற்படுத்தும் மந்திரம் இயற்கைச் செந்தமிழ் மறையாகிய ‘ஓம்’ என்னும் ஒலியே என்கிறது, திமூலரின் திருமந்திரம்.(560).

 

 “ முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே”

 

தியானப் பயிற்சியால் பரம்பொருளை ஒளி வடிவாகக் காண இயலும். பரம்பொருளை முகக் கண் கொண்டு பார்ப்பது மூட்த்தனம் ; அகக் கண்கொண்டு பார்ப்பதே மகிழ்ச்சி. அகக் கண்ணால் காணும் ஆனந்தத்தை விவரிக்க இயலாது என்பது உண்மையே.

 

அறிவியல் சிந்தனை:  

இதய நோய் வல்லுநர் மருத்துவர் வி. சொக்கலிங்கம் கூறும் அறிவியல் கருத்துககளைக் காண்போம்.

பலவகையான மன நிலைகளில் மூளையின் செயற்பாடு சீராக அமையாததனால் உணர்ச்சி வயப்படும் உடம்பில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன ; அவற்றின் விளைவாக……..

வேகமான இதயத்துடிப்பு ; இரத்த அழுத்த நோய் ; சர்க்கரை நோய் ; இரத்தக் கொழுப்பின் அளவு அதிகரித்தல் ஆகிய பிணிகள் ஏற்படுகின்றன. அதன் விளைவாக அவை ஒருவரைத் தீய பழக்கங்களான புகை பிடித்தல் . மது அருந்துதல், போன்றவற்றுக்கு ஆளாக்குகின்றன. நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் தவிப்பதனால் உடல் பருமனும் எடையும் அடிகமாகி இதய இரத்தக் குழாய்கள் சுருங்குவதனால், இரத்த ஓட்டம் தடைப்பட்டு, உயிர்க்கொல்லி நோயான மாரடைப்புக்கு ஆளாக்குகின்றது.

 

 இந்நோயினால் மட்டும் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தது 90 பேர் உயிர் இழக்கின்றனர்.

 

 இந்த அதிர்ச்சிதரும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி மன இயல்பின் தன்மையை முறைப்படுத்துவதே.

இந்நிலையை அடைய நம் முன்னோர்களான சித்தர்கள் பலகாலமாகவே மக்களுக்குக் கூறிவருவது தியான் முறைதான். என்கிறார் மருத்துவர்.

.…………சித்தர்கள்..…திருமூலர்..…….தொடரும்…………

 

சனி, 11 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 122.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 122.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்- திருமூலர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

 சித்தர்கள் வரிசையில் முதலிடம் பெறும் பேரறிஞர் – திருமூலர்.மனிதகுலம் நோய் நொடியின்றி நூறாண்டுக் காலம் வாழ்வதற்குரிய அரிய நெறிகளை வழங்கியவர் திருமூலர்.

 

இறை நெறி :

அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்

இன்பமும் இன்பக் கல்வியுமாய் நிற்கும்

இறைவன்………………………….” என்று இறைவனின் குணநலன்களைப் போற்றுகிறார்.

 

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை,

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே.” – என்னும் திருமூலர் வாக்கு, தன்னை அறிந்து ; தன் ஆற்றல்களை அறிந்து ; தன்னைச் சுற்றிவாழும் மனிதர்களை அறிந்து எவனொருவன் வாழ்கின்றானோ  அவனே கேடின்றி வாழ்வான் என்கிறார்.

 

“நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்

நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்

நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு

நெறியின் நெருஞ்சி முள் பாயாகிலவே.”

வாழ்வில் சான்றோர் கூறும் நல்ல நெறிகளை ஏற்றுப் போற்றாது மனம் போன போக்கில் நடந்தால் நெருஞ்சி முள்ளைப்போல் துன்பங்கள் தொடர்ந்து வந்து துன்புறுத்தும். ஆசா பாசங்களை அடக்கி நெறி நின்றால் என்றும் இன்பமே.

 மனத்திட்பம் :

“நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி

உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்

பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடும்

சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே.”

வெளியெல்லாம் அடங்கியிருக்கும் புருவ நடுவில் எண்ணத்தையும் உயிர் மூச்சையும் ஒடுங்கியிருக்கச் செய்யும் வன்மையுடையது கேசரி முத்திரை, இதனைத் தீக்கை, என்றும் கூறுவர்.

அருட்பிரகாச வள்ளலார், அருட்பெருஞ்சோதி அகவலில் குறிப்பிடும் அருள்வெளிப்பதி என்பது இருகண்களுக்கு இடையே புருவ மத்தியில் அமைந்த இடைவெளியினை இது கீழ் ஒன்றும் மேல் ஒன்றுமாக அமைந்த (ஃ) முப்புள்ளி வடிவாகிய ஆய்த எழுத்தினைப் போன்று இரண்டு கண்களுக்கு  மேல் மத்தியில் அமைந்திருத்தலின் ’ஒள’ கார எழுத்தினை  அடுத்துக் கூறப்பட்டுள்ளமை உய்த்துணர்தற்கு ரியதாகும்.

திருமூலர் கூறியவாறு நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளியில் உள்ளத்தை ஒன்றவைத்துத் தியானிக்கும் முறையே சிறந்த தவமாகும் என்று விளக்குகிறார் அறிஞர் க. வெள்ளைவாரணனார்.


.........................திருமூலர்............தொடரும்.......................

 

 

 

வெள்ளி, 10 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 121.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 121.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

சித்தர்கள், தொன்மைக்காலத்தே காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்து, இயற்கையின் அளப்பரிய ஆற்றலைக் கண்டறிந்தனர்.

 

 மானுட வாழ்வின் பல்வேறு நிலைகளை ஆராய்ந்து, மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வதற்கான வழிகளைச் சுட்டிச் சென்றுள்ளனர்.  வாழ்வியல் நெறி, உளவியல், உடலியியல், மரம் செடிகொடிகள்,  இலை தழைகள், நீரியல், நிலவியல், வானியியல்  இன்னபிற இயற்கைக் கூறுகளை அணு அணுவாக ஆராய்ந்தனர்.

 

 

  “ செப்பரிய மூன்றுலகம் செம்பொன் ஆக்குவோம்

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்

இப்பெரிய உலகத்தை இல்லாமல் செய்வோம்

எங்கள் வல்லபம்கண்டு ஆடாய் பாம்பே.”

என்று தம் ஆற்றலைப் புலப்படுத்துகிறார் பாம்பாட்டிச் சித்தர்.

 

 சித்தர்கள், உடம்பையும் உயிரையும் பேணி வளத்தவர்கள், காயசித்தியினால் உடம்பை அழியாமல் ஆக்கி இறைநிலை பெற்றவர்கள்.

 

‘ உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”

 என்கிறார் திருமூலர்.

 

உடம்புக்குள்ளேயே இறைவனைக் கண்டவர்கள் ; அகத்துள்ளே ஈசனைக் கண்டு புறத்துள்ள ஆரவாரங்களையெல்லாம் வெறுத்தனர்.

யோக சித்தியினால் எமனையே வென்றவர்கள்.

 

“காலனை வென்ற கருத்தறிவாளர்க்குக்

காலங்கள் ஏதுக்கடி குதம்பாய்….” என்றார் குதம்பைச் சித்தர்.

 

உள்ளும் புறமுமாக ஓடும் வாசி நிலையை யோகத்தினால் கட்டுப்படுத்தி ஞானம் பெற்றவர்கள்.

 

“காணரிது எவராலும் இருசுவாசம்

காண்பவனே சிவசித்தன்.” என்கிறார் வான்மீகர்.

 

 உடல் உயிர் இரண்டும் வாழ்வாங்கு வாழும் நெறியை உணர்த்தியவர்களே தமிழ்நாட்டு விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளுமாகிய சித்தர்கள்.

.……………………சித்தர்கள்..…..…….தொடரும்…………

வியாழன், 9 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 120.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்.

 

நேற்றைய பதிவில் நிகழ்ந்த சிறு பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

சான்றோர் வாய் (மைமொழி : 120.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.


சித்த மருத்துவத்திற்கு முதலிடம் கொடுப்போரால் கொள்ளப்படும் மற்றொரு 18. சித்தர்கள்  இடம்பெறுகின்றனர்

 

1.)     அகத்தியர். 2.) கோதமர் சங்கரர். 3.) வைரவர். 4.) மார்க்கண்டர். 5.) உரோமர். 6.) புசுண்டர். 7.) காலாங்கி. 8.) புலத்தியர் கருவூரார். 9.). போகர்.  மேற்குறித்த சிலருடைய பெயர்களும் உள்ளன. இரு தொகைகளிலும் திருமூலர், அகத்தியர், (கும்பமுனி) , வான்மீகி, மச்சமுனி, கொங்கணர், போகர் பெயர்கள் காணப்படுகின்றன.


பழநி மலையில் தங்கி இப்போதுள்ள பழநிமுருகணின் நவபாடாணச் சிலையைச்செய்த போகரும் அவர் மாணாக்கர் புலிப்பாணியும் சீன நாட்டிற்குச் சென்று வந்தவர்கள் என்பர்.  மேலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்துவந்திருக்கின்றனர். சித்தர் கோவையில் உள்ள பட்டினத்தடிகள், பத்ரகிரியார்,  இராமலிங்க அடிகள், முதலியோரின் சில பாடல்களும் அவர்கள் சித்தர்களே என்பதைப் புலப்படுத்தும். .

.……………………சித்தர்கள்..…..…….தொடரும்…………………..

புதன், 8 ஜனவரி, 2025

 சான்றோர் வாய் (மைமொழி : 119. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

சித்தர்கள் :

”சித்து என்பதற்கு எல்லாவற்றையும் அறியும் அறிவு என்றும் ; சித்தர் என்றால் எல்லவற்றையும் அறிந்தவர்கள் என்றும் பொதுவகையில் கூறுவர். சித்துகள் கைவரப்பெற்றவர்களே சித்தர்கள்.

சித்துகள் எட்டு வகைப்படும் ; அவற்றை அட்டமாசித்து என்பர். அவையாவன….

1.)     அணுவைவிட நுண்ணிய உருவம் கொள்ளும் -அணிமா.

2.)     மலையினும் பெரிய உருவம் கொள்ளும் –மகிமா.

3.)     உடலை எடையற்றதாக்கி  விரைந்து செல்லும் வல்லமை பெறும் – லகிமா.

4.)     எண்ணியதை எண்ணியவாறே பெறும் –பிராத்தி.

5.)     நினைத்தவுடன் படைக்கும் ஆற்றல் – பிரகாமியம்.

6.)     அனைவராலும்  வணங்கத்தகும் தெய்வத்தன்மை –ஈசத்துவம்.

7.)     உலகம் அனைத்தையும் தன்வயப்படுத்தும் –வசித்துவம் .

8.)     ஐம்புல இன்பங்களைத் முற்றிலும் துறந்த நிலை – கரிமா.                                                                                                 

அனைத்தையும் அறியும் பேரறிவும் அனைத்தையும் படைக்கும் பேராற்றலும் கொண்டுபயிற்சியினாலும் பக்குவத்தினாலும் அட்டமா சித்துகள் கைவரப்பெற்று, உடம்பை நெடுங்காலம் அழிவில்லாமல் வாழவைப்பதான காயசித்தியை விளைவித்து அற்புதங்கள் பல நிகழ்த்தி உலகினரை உய்வித்து மெய்ஞானத்தால் இறைநிலை பெற்றவர்களே சித்தர்கள்.

 

தமிழகத்தில் பதினெட்டுச் சித்தர்கள் இருந்தார்கள் என்பர்,

1.)     திருமூலர். 2.) இராமதேவர். 3.) கும்பமுனி. 4.) இடைக்காடர். 5.) தன்வந்திரி. 6.) வான்மீகி. 7.) கமலமுனி. 8.) போகநாதர். 9.) மச்சமுனி. 10.) கொங்கணர். 11.) பதஞ்சலி. 12.) நந்திதேவர். 13.) போதகுரு. 14.) பாம்பாட்டிச் சித்தர். 15.) சட்டைமுனி. 16.) சுந்தரானந்த்தேவர். 17.) குதம்பைச் சித்தர். 18.) கோரக்கர். முதலியோர் ஞானநிலையை முதன்மையாகக் கொள்வோரால்  குறிக்கப்படுகின்றனர்.

2.)     சித்த மருத்துவத்திற்கு முதலிடம் கொடுப்போரால் கொள்ளப்படும் மற்றொரு 18. சித்தர்கள்  இடம்பெறுகின்றனர்.

 

New comment on "சவுடால் நகைச்சுவை குறும்படம் | SAVUDAAL COMEDY SHORT FILM |T.T.RAAGHAVAAMURTHY | KALAPPAL KUMARAN"

என் வலையொளியில் காண்க.

 

YouTube 

6:53 PM (2 hours ago)

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

to KALAPPAL

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif


எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

சித்தர்கள் :

”சித்து என்பதற்கு எல்லாவற்றையும் அறியும் அறிவு என்றும் ; சித்தர் என்றால் எல்லவற்றையும் அறிந்தவர்கள் என்றும் பொதுவகையில் கூறுவர். சித்துகள் கைவரப்பெற்றவர்களே சித்தர்கள்.

சித்துகள் எட்டு வகைப்படும் ; அவற்றை அட்டமாசித்து என்பர். அவையாவன….

1.)     அணுவைவிட நுண்ணிய உருவம் கொள்ளும் -அணிமா.

2.)     மலையினும் பெரிய உருவம் கொள்ளும் –மகிமா.

3.)     உடலை எடையற்றதாக்கி  விரைந்து செல்லும் வல்லமை பெறும் – லகிமா.

4.)     எண்ணியதை எண்ணியவாறே பெறும் –பிராத்தி.

5.)     நினைத்தவுடன் படைக்கும் ஆற்றல் – பிரகாமியம்.

6.)     அனைவராலும்  வணங்கத்தகும் தெய்வத்தன்மை –ஈசத்துவம்.

7.)     உலகம் அனைத்தையும் தன்வயப்படுத்தும் –வசித்துவம் .

8.)     ஐம்புல இன்பங்களைத் முற்றிலும் துறந்த நிலை – கரிமா.                                                                                                 

அனைத்தையும் அறியும் பேரறிவும் அனைத்தையும் படைக்கும் பேராற்றலும் கொண்டுபயிற்சியினாலும் பக்குவத்தினாலும் அட்டமா சித்துகள் கைவரப்பெற்று, உடம்பை நெடுங்காலம் அழிவில்லாமல் வாழவைப்பதான காயசித்தியை விளைவித்து அற்புதங்கள் பல நிகழ்த்தி உலகினரை உய்வித்து மெய்ஞானத்தால் இறைநிலை பெற்றவர்களே சித்தர்கள்.

 

தமிழகத்தில் பதினெட்டுச் சித்தர்கள் இருந்தார்கள் என்பர்,

1.)     திருமூலர். 2.) இராமதேவர். 3.) கும்பமுனி. 4.) இடைக்காடர். 5.) தன்வந்திரி. 6.) வான்மீகி. 7.) கமலமுனி. 8.) போகநாதர். 9.) மச்சமுனி. 10.) கொங்கணர். 11.) பதஞ்சலி. 12.) நந்திதேவர். 13.) போதகுரு. 14.) பாம்பாட்டிச் சித்தர். 15.) சட்டைமுனி. 16.) சுந்தரானந்த்தேவர். 17.) குதம்பைச் சித்தர். 18.) கோரக்கர். முதலியோர் ஞானநிலையை முதன்மையாகக் கொள்வோரால்  குறிக்கப்படுகின்றனர்.

2.)     சித்த மருத்துவத்திற்கு முதலிடம் கொடுப்போரால் கொள்ளப்படும் மற்றொரு 18. சித்தர்கள்  இடம்பெறுகின்றனர்.

 

New comment on "சவுடால் நகைச்சுவை குறும்படம் | SAVUDAAL COMEDY SHORT FILM |T.T.RAAGHAVAAMURTHY | KALAPPAL KUMARAN"

என் வலையொளியில் காண்க.

 

YouTube 

6:53 PM (2 hours ago)

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

to KALAPPALKUMARAN

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

சான்றோர் வாய் (மைமொழி : 119. அறிவியல் சிந்தனைகள்தொல்தமிழர் –சித்தர்கள்.

@Jp.ParkaviJp.Parkavi commented on your video

https://ci3.googleusercontent.com/meips/ADKq_NbMt8jnX4q3265XNZmOKfumrCojHlYB1acmgxFTO6ulikFVdTvIfzSbZ0Lpj5WtrTlIpx-vfD9ThDZ2DmfYkfd52dnZr4Y=s0-d-e1-ft#https://i.ytimg.com/vi/M0i524C7nh8/mqdefault.jpg

சவுடால் நகைச்சுவை குறும்படம் | SAVUDAAL COMEDY SHORT FILM |T.T.RAAGHAVAAMURTHY | KALAPPAL KUMARAN

https://yt3.ggpht.com/ytc/AIdro_lT8Qu4LCD_pf9EwiAYpLW0gk_IeN8X9SN8VrwEe_FldWB8_Tdy3pM5DhTGCs4a8PJ_Cg=s50-c-k-c0x00ffffff-no-rj

@Jp.ParkaviJp.Parkavi

சவுடால் குறும்படத்தின் கதை ஆசிரியர் தயாரிப்பாளர் களப்பால் குமரன் அவர்களுக்கும் இயக்குனர் T.T. ராகவா மூர்த்தி அவர்களுக்கும் சவுடானாக இயக்குனர் மணிவாசகன் அவர்களுக்கும் சவடாலில் நடித்த அனைத்து கதாபாத்திர நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.. ஒளிப்பதிவு கமல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

 

@Jp.ParkaviJp.Parkavi commented on your video

https://ci3.googleusercontent.com/meips/ADKq_NbMt8jnX4q3265XNZmOKfumrCojHlYB1acmgxFTO6ulikFVdTvIfzSbZ0Lpj5WtrTlIpx-vfD9ThDZ2DmfYkfd52dnZr4Y=s0-d-e1-ft#https://i.ytimg.com/vi/M0i524C7nh8/mqdefault.jpg

சவுடால் நகைச்சுவை குறும்படம் | SAVUDAAL COMEDY SHORT FILM |T.T.RAAGHAVAAMURTHY | KALAPPAL KUMARAN

https://yt3.ggpht.com/ytc/AIdro_lT8Qu4LCD_pf9EwiAYpLW0gk_IeN8X9SN8VrwEe_FldWB8_Tdy3pM5DhTGCs4a8PJ_Cg=s50-c-k-c0x00ffffff-no-rj

@Jp.ParkaviJp.Parkavi

சவுடால் குறும்படத்தின் கதை ஆசிரியர் தயாரிப்பாளர் களப்பால் குமரன் அவர்களுக்கும் இயக்குனர் T.T. ராகவா மூர்த்தி அவர்களுக்கும் சவுடானாக இயக்குனர் மணிவாசகன் அவர்களுக்கும் சவடாலில் நடித்த அனைத்து கதாபாத்திர நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.. ஒளிப்பதிவு கமல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..