திருக்குறள்
– சிறப்புரை : 441
பெரியாரைத்
துணைக்கோடல்
அறனறிந்து மூத்த
அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். --- ௪௪௧
அறவழியைப்
போற்றி அதன்வழி நிற்க, அறிவிலும் பட்டறிவிலும் தேர்ந்த பெரியோர்களுடைய நட்பினை ஆராய்ந்து
அறிந்து தேடிப் பெறவேண்டும்.
“
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் …” ----
நாலடியார்.
பெரியோர்களுடன் கொள்ளும்
நட்பு, பிறை போல ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர்ந்து சிறக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக