திருக்குறள்
– சிறப்புரை : 438
பற்றுள்ளம்
என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதுஒன்று
அன்று.
– ௪௩அ
ஈத்துவக்கும் இன்பம் அறியாது பொருளைச் சேர்த்து வைத்துக் காக்கும் தன்மையானது
குற்றங்களுள் ஒன்றாக எண்ணத்தக்கதன்று, அது மிகக் கொடிய குற்றமாகும்.
“
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே”
– புறநானூறு.
பெற்ற செல்வத்தால் பெறும் பயனாவது, பிறர்க்குக் கொடுத்தல் ஆகும், அதனை
விடுத்துத் தாமே துய்ப்போம் என்று கருதினால் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் இம்மைப்
பயன்கள் கிடைக்காது வருந்த நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக