திருக்குறள்
– சிறப்புரை : 439
வியவற்க எஞ்ஞான்றும்
தன்னை நயவற்க
நன்றி பயவா
வினை.
-- ௪௩௯
எந்நிலையில்
இருந்தாலும் எப்பொழுதும் தன்னை தானே வியந்து
போற்றிக்கொள்ளாதே ; நன்மை பயக்காத செயல்களைச் செய்ய விருப்பம் கொள்ளாதே.
” தன்னைவியப்பிப்பான்
தற்புகழ்தல் தீச்சுடர்
நல் நீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
வியவாமை அன்றே வியப்பு ஆவது இன்பம்
நயவாமை அன்றே நலம். --- நீதிநெறி விளக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக