திருக்குறள்
– சிறப்புரை : 424
எண்பொருள வாகச்
செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள்
காண்பது அறிவு.
~ 424
பிறர்க்கு
அரிய பொருளை விரித்துரைக்கும்போது அவர் எளிதில் புரிந்துகொள்ளுமாறு சொல்லவேண்டும்
; பிறர் கூறும் கருத்துக்களின் நுண்பொருளைத் தாமே ஆராய்ந்து அறிந்துகொள்வதே அறிவாகும்.
“ புலம் மிக்கவரைப்
புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம் ….” ~ பழமொழி.
அறிவு
மிக்கவரது அறிவினை ஆராய்ந்து அறிதல் அறிவு மிக்கவர்க்கே உளதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக