திருக்குறள்
– சிறப்புரை : 433
தினைத்துணையாம்
குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு
வார்.
~ ௪௩௩
பழிக்கு அஞ்சி வாழும் நல்லொழுக்கம் உடையோர் தினை அளவாகிய மிகச் சிறிய
குற்றம் வரினும் அதனைப் பனை அளவாகக் கருதி
மிகவும் அஞ்சி ஒடுங்குவர்.
“கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.”
~ வாக்குண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக