திருக்குறள்
– சிறப்புரை : 444
தம்மிற் பெரியார்
தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம்
தலை.
---- ௪௪௪
தம்மைவிட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கும் பெரியாரைச் சுற்றமாகக்
கொண்டு ஒழுகுதல் ஓர் அரசன் தான் பெற்றுள்ள படை வலிமைகள் எல்லாவற்றையும் விடத் தலை சிறந்த
வலிமையாகும்.
”
குன்றிய சீர்மையர் ஆயினும் சீர் பெறுவர்
குன்று அன்னார் கேண்மை கொளின்.”
------ நாலடியார்
பெருமை இல்லாதவர்கள், புகழில் மலைபோல் உயர்ந்து நிற்கும் சான்றோர்களின்
நட்பைக் கொள்வார்களானால் அவர்களும் பெருமை பெற்று விளங்குவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக