குற்றங்கடிதல்
திருக்குறள்
– சிறப்புரை : 431
செருக்கும்
சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித
நீர்த்து.
~ ௪௩௧
தன்முனைப்பும் வெகுளியும் கீழ்மைக்குணமும் ஆகிய குற்றங்கள் இல்லாதவர்களுடைய
செல்வம் பெருமிதம் கொள்ளும் சிறப்புடைத்தாம்.
“பெரிய
ஓதினும் சிறிய உணராப்
பீடு
இன்று பெருகிய திருவின்
பாடுஇல்
மன்னரைப் பாடன்மார் எமரே” ~ புறநானூறு.375.
பலவாறு எடுத்துக்கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சி இல்லாத பெருஞ்
செல்வத்தைப் பெற்றுள்ள பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக