திருக்குறள்
– சிறப்புரை : 445
சூழ்வார்கண்
ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச்
சூழ்ந்து கொளல்.
– ௪௪௫
ஆராய்ந்த கல்வியறிவால் அறிவுரை வழங்கும் சான்றோர்கள் மன்னனுக்குக் கண் எனத் தக்கவர், அத்தகையோரைப் போற்றித் துணையாகக்
கொள்ளல் வேண்டும்.
“
இசையும் எனினும் இசையாது எனினும்
வசை
தீர எண்ணுவர் சான்றோர் …” – நாலடியார்.
சான்றோர், தம்மால் முடியும் என்றாலும்
முடியாது என்றாலும் எப்பொழுதும் குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக