திருக்குறள்
– சிறப்புரை : 430
அறிவுடையார்
எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும்
இலர். ~ ௪௩௰
அறிவுடையார் எவ்வகையான செல்வம் இல்லாதவராக இருந்தாலும் எல்லாம் உடையவர்
ஆவர் ; அறிவிலார் எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்தாலும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
தேடிப் பெறவேண்டிய அரிய செல்வம் அறிவே என்றறிக.
”ஓதியும்
ஓதார் உணர்வு இலார் ஓதாதும்
ஓதி அனையர் உணர்வுடையார் …….
நாலடியார்.
பகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே ; பகுத்தறிவு
உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக