திருக்குறள்
– சிறப்புரை : 429
எதிரதாக் காக்கும்
அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர்
நோய்.
~ ௪௨௯
எதிர் விளைவுகளை அறிந்து தன்னைக் காத்துக்கொள்ள வல்ல அறிவுடையார்க்கு
அவர் நடுங்கும்படியான துன்பங்கள் வந்து சேர்வதில்லை.
”
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவு அறிந்து மேலும் தாம்
சூழ்வன
சூழ்ந்து துணைமை வலி தெரிந்து
ஆள்வினை ஆளப் படும்.” …….
நீதிநெறி விளக்கம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக