தமிழ் ஊடகங்கள் பார்வைக்கு…..!
ஜல்லிக்கட்டு ..இல்லை – சல்லிக்கட்டு
காணும் பொங்கல் …. – கன்னிப் பொங்கல்.
கன்னிப்பொங்கல் எப்படிக் காணும் பொங்கலாயிற்று என்று
தெரியவில்லை. கன்னிப்பொங்கல், கன்னிப்பெண்களுக்கும்
சிறுவர் சிறுமியர்களுக்கும் உரிய திருநாளாகும்., வகை வகையான விளையாடி மகிழ்வார்கள்,
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்….. ஐந்தாறு சிறுமிகள்
ஒன்று கூடி ஒரு கூடையை எடுத்துக்கொண்டு தம் தெருவில் இருக்கும் வீடுகளுக்குச் சென்று
வாசலில் நின்று வட்டமிட்டு, கும்மி அடித்துக்கொண்டு பாடுவார்கள்.. வீட்டிலிருப்போர்
அரிசி, வெல்லம், கரும்பு, வாழைப்பழம் இவற்றைக் கூடையில் போடுவார்கள். சிறுமியர், யாராவது ஒருவர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் கூட்டாஞ்சோறு
ஆக்கி பலரோடு கூடி உண்பார்கள். வீட்டிற்குவரும் உற்றார் உறவினர்களைக் கண்டு மகிழ்வார்கள்.
திருமணம் முடித்து கணவர் வீடு சென்ற மகளிர் கன்னிப் பொங்கலன்று கட்டாயம் பிறந்த வீட்டிற்குக்
குடும்பத்தோடு வந்து விடுவார்கள்.கன்னிப் பொங்கலன்று அம்மன் கோயில் திருவிழா, மாலை
நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும், அம்மனிடம் வேண்டுதல், நேர்த்திக்கடன் செய்தல்,
குழந்தைக்கு முடி இறக்குதல், காது குத்துதல் இன்னபிற சடங்குகள் எல்லாம் முறைப்படி நடக்கும்.
ஊரும் உறவும் ஓரிடத்தில் கூடிக் கொண்டாடி மகிழ்வதே கன்னிப்பொங்கல். எங்கு சென்றாலும்
எப்படி இருந்தாலும் பிறந்த மண்ணின் பெருமை விளங்க, ஊரோடும் உறவோடும் மகிழ்ந்து இனிது களிக்கும்
நன்னாள் – கன்னிப்பொங்கல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக