புதன், 21 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1053


திருக்குறள் -சிறப்புரை :1053

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து. --- ௧0
(இரப்பும் ஓர் ஏஎர்)

இருப்பதை மறைத்தல் அறியாத இரக்கம் நிறைந்த நெஞ்சினை  உடையவராகி, ஈதலாகிய கடமை உணர்வுடையார் முன் நின்று, வறுமையுற்றார் இரத்தலும் ஓர் அழகுடையதாம்.

“ எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப்
 பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண்
உள்ளி வந்தனென் யானே ……..” -----புறநானூறு.

ஏழு வள்ளல்களும் இறந்தபின்பு கண்டார்க்கு இரக்கம் வரப் பாடி வருவாரும் பிறரும் கூடி,  இரந்தோரது துன்பத்தைத் தீர்ப்பவன் ‘யானென்று’ நீ இருத்தலால், விரைந்து இவ்விடத்துப் பரிசுபெற நினைந்து வந்தேன் யான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக