வியாழன், 30 ஏப்ரல், 2015

பரிபாடல் சொல் வளம்

பரிபாடல் சொல் வளம்

கலிழ்கடல் – புடைபெயர்ச்சியுடைய கடல்

சிவிறி – துருத்தி / நீர் தூவும் குழல்

நீரெக்கி – (நீர்-எக்கி ) நீரைப் பீச்சுதல்

சீத்தல் – வீசுதல்

பாணி – காலம்

சாறு – விழா

படாகை – கொடி / வெற்றிக் கொடி

அரி – வண்டு

யாணு – அழகு

தாளிதம்  - கால் சட்டை / மகளிர் உள்ளாடை

விரவு நரை – கருமயிர் ஊடே விரவிய நரை

வெறு நரை – முழுதும் வெள்ளை

மழபுலவர் – இளம் அறிஞர்

மழவு – இளமை

வண்ணம் – இயற்கை அழகு

தேசு – செயற்கை அழகு

கோல் எரி / கோலெரி – தீ வர்த்தி / தீவட்டி

காமவேள் – அம்புத் தொழில் பயிலும் சாலை

தேயா மண்டிலம் – ஞாயிறு

தேயும் மண்டிலம்  - திங்கள்

பன்னீர் – மிக்க நீர்

சின்னீர் – சிறிது நீர்

கொம்மை – இளமுலை

வச்சியம் – வசியம் / வசிகரித்தல்


முனைவர்க்கும் – முனிவர்களுக்கும்

 ( மருளறு தேர்ச்சி முனைவர் என்றது  

வினையின் நீங்கி விளங்கிய அறிவுடையோரை)





புதன், 29 ஏப்ரல், 2015

அசுணமா -2

அசுணமா இதுவாக இருக்கலாமோ-?

சோலங்கி குரங்குகள் கட்டை விரல் உடையன. சிம்பன்சி கொரில்லாவைவிட மேம்பட்டவை. பெண் குரங்கு வெண்ணிறம் – பழம் – பூ இவற்றின் உணவு – இசைத் திறன் உடயவை-  வசிப்பிடம் வடகிழக்கு இந்தியா –  இசை அறியும் அறிவு உடையதுதான் அசுணமா என்கிறது சங்க இலக்கியம். மேலும் ஆய்க.  Discovery tamil

புறநானூற்றின் பெருமை

அரசியல் வாழ்வில் மக்கட்கு நால்வகை உரிமைகள் இன்றியமையாது வேண்டப்படுகின்றன என்பதை, இரண்டாவது உலகப்போரை வெற்றியுற முடித்த அரசியலறிஞர் வற்புறுத்தியுள்ளார். அதனையுணர்ந்த அரசியலுலகம், அத்லாந்திக் சார்ட்டர் எனப்படும் உரிமையாவணம் வகுத்தது; அது நீர்மேல் எழுத்தாய் நிலைபேரின்றி விளங்காதாக, பண்டைநாளில் நம் தமிழகத்தே அவ்வுரிமை விளங்கியிருந்ததென்று காட்டும் பேரிலக்கியம் இப்புறநானூறு என இதனைக் கற்றுணர்ந்தோர் நன்கறிவர். பேச்சுரிம்மை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை என்ற நான்கும் அத்லாந்திக் சார்ட்டரால் உரிமைகளாக வற்புறுக்கப்படுகின்றன. இந்த நான்கையும் பண்டைத் தமிழர் தம்முடைய பிறப்புரிமையாகக் கொண்டு வாழ்ந்த திறத்தை இப்புறநானூறும் ஏனைத் தொகைநூல்களும் நன்குணர்த்துகின்றன. ஆராய்க .
- கலாநிதி ஒளவை சு துரைசாமிப் பிள்ளை, முன்னுரை,

 புறநானூறு மூலமும் – உரையும், தொ.1, பூம்புகார் பதிப்பகம், மு.ப. 2009.

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

கப்பல் போக்குவரத்து

கப்பல்-பன்னாடு
வேறு பன்னாட்டிற் கால் தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
                 நக்கீரனார், நற். 31: 8,9
வேறாகிய பல நாட்டினின்றும் கலங்களைக் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலவை ஒத்த மணற்பரப்பில்.
பாண்டியர் துறைமுகம்-
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலியவியந் தன்றிவ் வழுங்கல் ஊரே
         மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், அகநா. 70: 13-17
வெற்றி வேலினையுடைய பாண்டியரது மிக்க பழைமையுடைய திருவணைக் கரையின் (தனுஷ்கோடி) அருகில், முழங்கும் இயல்பினதான பெரிய கடலின் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரில் வல்ல இராமன் அரிய மறையினை ஆராய்தற் பொருட்டு.....
கலங்கரை விளக்கம்
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட                                   
 கோடு உயர் திணி மணல் அகந்துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய
   மதுரை மருதன் இளநாகனார், அகம். 255 : 1-6
உலகமே கிளர்ந்து எழுந்தாற்போன்ற அச்சம் பொருந்திய நாவாயானது, வேகமான வீசும் இயல்புனதாய காற்று அசைத்துச் செலுத்த, இரவு பகலாக ஓரிட்த்தும் தங்காது புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப் பரப்பைக் கிழித்துக் கொண்டு சென்றது.நாவாய் ஓட்டியும் கரை உயர்ந்த மணல் செறிந்த துறையிடத்தே, ஒளி பொருந்திய விளக்கினால் செல்லும் இடம் அறிந்து செலுத்த .....
பொன் சுமந்த கலம்
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை
                    மாறோக்கத்து நப்பசலையார், புறநா.126 : 14 – 16

சினம் மிக்க படையுடைய சேரன் மேலைக் கடலில் பொன்னைத் தரும் மரக்கலம் (கப்பலை) செலுத்துமிடத்து இடையில் வேறு சிலர் மரக்கலம் செலுத்த முடியுமோ?

திங்கள், 27 ஏப்ரல், 2015

குடவோலை

குடவோலை
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்
        மருதனிளநாகனார், அகநா. 77: 7,8
கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும், அவ்வோலையைத் தேரும் மாக்கள் அவையிற்றை வெளியே ஈர்த்தெடுத்தல் போல.( ஊராண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற் பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின் கட் போட்ட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர்முன் குடத்தின்மேலிட்ட இலச்சினையைக்கண்டு, நீக்கி உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென்ன முடிபு செய்வதோர் வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை என்று கூறப்படும்.பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.-நாட்டார்)

(

கற்பழிப்பு- தண்டனை

– கற்பழிப்பு- தண்டனை-
கரும்பு அமல் படப்பை பெரும்பெயர்க் கள்ளூர்
திரு நுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
                           மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், அகம்.256 : 15 – 20
கரும்புத் தோட்டம் நிறைந்த கள்ளூர்- நெறிதவறிய  அறமிலி ஒருவன் இளம்பெண் ஒருத்தியின் அழகிய பெண்மை நலத்தினைக் கவர்ந்து உண்டான், பின்னர் அவளை அறியேன் என்று அறவோர் முன் பொய் உரைத்தான். அவர்தம் சேர்க்கையை அறிந்தார்வாய்க் கேட்டறிந்த அவையத்தார்  அவனைத் தளிர்கள் கொண்ட பெரிய மரத்தின்  மூன்று கவர்த்த கிளைகளின் நடுவே இறுகக் கட்டி வைத்து, அவன் தலையில் நீற்றினைசாம்பல்பெய்தனர்.


ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

அசுணமா

அசுணமா
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆருயிர் எஞ்ச
பறை அறைந்தாங்கு …….
              நல்லந்துவனார், கலித். 143 : 10 - 12
வஞ்சனையாலே தான் மீட்டிய யாழ் இசயைக் கேட்ட அசுணமாவைஇவ்வின்பம் உற்றதென்று அருள் செய்யாமல் முன்பு செய்த வஞ்சனையைக் கெடுத்துப் பின்னர் அதன் அரிய உயிர் போகும்படி பறையைத் தட்டினாற் போல்
          நல்லந்துவனார் , நெய். கலித்.143  : 10-13
பறைபட வாழா அசுணமா ..விளம்பிநாகனார், நான்மணி. 4:1
கேகயப் பறவைகள் பறையின் ஓசை தம் செவியில்பட்டால் உயிர் வாழ மாட்டா.
மேலும் காண்க: நற்றிணை, 244, 304 –அகநா. 88 அசுணம், ச.இ. -அசுணமா பிற்காலத்தில்
இன்னளிக் குரற்கேட்ட அசுணமா
அன்னளாய் மகிழ்வெய்து – சீவக.1402 – இனிமை பொருந்திய யாழின் இசைகேட்டு மகிழ்கின்ற அசுணமாபோலத் திலோத்தமை மகிழ்ச்சி அடைந்தாள்.
பாம்புச் செடி-அசுணம் 
அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப்
பகலும் அஞ்சும் சுரனே
                  ஊட்டியார், அகநா. 68: 20,21
 அகன்ற வாயினையுடைய பாம்புச் செடியினையுடையதும் ஆகிய,  பகற்பொழுதினும் மிக்க நடுக்கத்தினைச் செய்யும் சுரநெறியில்..
பாந்தள் படார் = பாம்புபோலும் இயல்பினையுடைய ஒரு செடி.( Arisaema Leschenaulti  பி.எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,1967, ப. 75. ) பாம்பு யானையை உண்ண வல்லது என்பதை – இடிகொள் வேழத்தை யெற்றொடும் எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம் “ கம்ப. சித்திரக் ; 35 மாசுணம் = பெரும்பாம்பு – (Rock Snake, Phythonidac)
acuṇam-அசுணம்
n.
A creature believed to be so susceptible to harmony that when it is fascinated by notes of music, a sudden loud beat of the drum causes its instantaneous death;
இசையறிவதோர்விலங்கு. (நற்.304.)
US scientists have announced the discovery of a new species of dinosaur. Its fossils offer further clues to how the dinosaurs became extinct 66 million years ago.
Anzu wyliei is a strange, bird-like creature that has a bony crest on top of a beaky head and a long tail like a lizard.
The animal was identified from the partial remains of three skeletons collected in North and South Dakota.
It is reported in PLoS ONE journal.
88 – அசுணம் பன்றி பல்லி சகுனம்88
கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ் செத்து
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
                              ஈழத்துப் பூதன்சேந்தனார், அகநா.88: 10 – 12
கன்னத்திலிருந்து பெருகி வழியும் அழகிய மத நீரில் கரிய சிறகினையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்கயாழிசை எனக் கருதி பெரிய மலையின் பிளப்பாய குகையிலுள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும். பன்றி, பல்லி நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து செழுந்தினை உண்ண வரும். நற்.98காண்க. காழியர்வண்ணார்89 ( ஓடுதேர் - பேய்த் தேர்கானல் நீர்பேயும் இருப்பதுபோல் இருக்கும் ஆனால் இருக்காது என்று பொருள்படுமோ?89)
அசுணம்-நற்றிணை, 244,
விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவருந் தீங்குரல்
மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
                  கூற்றங்குமரனார், நற்.244 : 1-4
மழை பெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின் விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலும் என்று நறுமணம் கமழும் மலைமுழையிலிருக்கும் அசுணமாகிய விலங்கு செவிகொடுத்துக் கேளாநிற்கும்.

அசுணம்- நற்றிணை304
அசுணங் கொள்பவர் கைபோல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
                 மாறோக்கத்து நப்பசலையார், நற்.304:8,9
இசையறி விலங்காகிய அசுணமானைக் கொல்பவருடைய கையைப் போல் இன்பமும் துன்பமும் உடையதாயிரா நின்றது.( அசுணம் கொல்பவர் முதலில் யாழை வாசித்துப் பின்பு செவியில் ஏற்கவொண்ணாத பறையை முழக்கி அவற்றைக் கொல்வதனால் இன்பமும் துன்பமும் உடைமையின் அதனை உவமித்தார்-பின்னத்தூரார்)

 -அசுணமா பிற்காலத்தில்
இன்னளிக் குரற்கேட்ட அசுணமா
அன்னளாய் மகிழ்வெய்து – சீவக.1402 – இனிமை பொருந்திய யாழின் இசைகேட்டு மகிழ்கின்ற அசுணமாபோலத் திலோத்தமை மகிழ்ச்சி அடைந்தாள்.
பறைபட வாழா அசுணமா ..விளம்பிநாகனார், நான்மணி. 4:1
கேகயப் பறவைகள் பறையின் ஓசை தம் செவியில்பட்டால் உயிர் வாழ மாட்டா.
Found: Remains of  ‘ chicken from hell’

London: A  12-ft long 226kg sharp-clawed dinosaur, a killing machine dubbed “ the chicken from hell”, has been found by scientists to have romed earth along with

சனி, 25 ஏப்ரல், 2015

thirikai

திரிகை –
..... மனயோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப... 
                                      பெருந்தலைச்சாத்தனார்,அகம். 224 :11,12
 -திரிமரம் = திரிகை

மனைவி பதமாக காய்ந்த அரியினைத் திரிகையில் இட்டுத் திருக ..

scientfic approach on Thirukkural

 “Angry people at increased risk of heart attacks–TOI- 5-3-14
London: Scientists have confirmed that hot-headed people with outbursts of anger are more prone to heart attacks, strokes and other cardiovascular problems in the two hours immediately afterwards. Five episodes of  anger a day would result in around 158 extra heart attacks per 10,000 people with a low cardiovascular  risk per year, increasing to about 657 extra heart  attacks per 10,000 among those with a high cardiovascular risk.
The Harvard School of Public  Health Researchers say ……………….
 “ This research found that people’s risk of heart attack and stroke increased for a short time after they lost their temper. It’s not clear what causes this effect. It may be linked to the physiological changes that anger causes to our bodies, but more research is needed to explore the biology behind this.”
HOMOEOPATHY PHYLOSOPHY
Constitution of the patient, his mind and temperament, occupation, mode of living and habits, social and domestic relations, age and sexual functions etc. give us individuality of the patient.( The Organon)
MIND: the ability to be aware of things and to think and reason, originating in the brain.
TEMPERAMENT: a person’s nature as it controls the way he or she behaves, feels, and thinks.
Thiruvalluvar proclaims ….. Anger kills.  Quite a few Thirukkurals amplify how anger affects  one’s mind and body and even prones fatal.



அதிகாரம் – 31, வெகுளாமை
சினமென்னும்  சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். குறள்.306
சினம் என்னும் நெருப்பு சேர்ந்தாரைக் கொல்வதோடு அவருக்கு நட்பாக நின்று புணைபோலப் பயன்படுவாரையும் சுட்டெரித்துப் பிரித்துவிடும்.
CHAPTER – 31,  THE AVOIDANCE OF ANGER
The wrath which is the killer of the men it doth embrace
Will burn their kinsmen too who are of raft-like helpful ways.
                                                                 ( Tr.) K.M.Balasubramaniam
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். குறள்.305
If thou wouldst fain protect thyself, do guard against thy spleen
If thou guardest not, thy own anger will destroy thee clean.
                                                                ( Tr.)  K.M.Balasubramaniam
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. குறள். 304
Because one’s anger slayeth one’s laughter and one’s cheer
Is  there a greater foe for one than one’s wrath to fear
                                                                   ( Tr.)  K.M.Balasubramaniam
உள்ளியது எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். குறள்.309
If he could but from whate’er thought of anger e’er refrain
The wishes all of his own heart will he at once attain.
                                                                  ( Tr.) K.M.Balasubramaniam
The above couplets offer general guidance to save life. As the ……. goes,  prevention are better than cure.

Causes
அதிகாரம்-4, அறன் வலியுறுத்தல்
CHAPTER – 4, ITERATION OF VIRTUE’S WORTH
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. குறள். 34
ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது, மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.
To be quite free from mental blots is all that’s righteousness
And all the rest of acts without  such freedom are but fuss.
                                                                 (Tr.)  K.M.Balasubramaniam
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். குறள். 35
பொறாமையும், ஆசையும், சினமும், கடுஞ்சொல்லும் இந்நான்கையும் விலக்கி நடத்தலே அறமாம்.
That life alone is virtue which doth eschew these as ill
The passions four like envy, greed and wrath and words evil.
                                                                        ( Tr.)  K.M.Balasubramaniam
We may find the main cause for the disorder / malfunction in a human body. According to Thiruvalluvar, one should rest one’s mind in peace; If one fails to do so , it is bound to  affect the  inner organs of the body.  As advised by Thiruvalluvar one should adopt a four-fold path; 1.Envy, 2.Greed, 3.Anger,  4. Harmful words. Envy lead to Greed, envy and greed lead to anger;  envy, greed and anger lead to outbursts of fury. This will lead to mental agony, hypertension, reddish eyes , increasing heart beats, giddiness, resulting in death.