ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

புளிச்சோறு
செம்புற்று ஈயலின் இன் அளை புளித்து
                                              கபிலர், புறநா. 119 : 3
செம்புற்றின் ஈசலை, இனிய மோரோடு கூட்டிச் சமைத்த புளிங்கறியை உடைத்து – பாரி நாடு.
இது போன்று வேறு பல உணவு வகைகளையும் சமையல் முறைகளையும் மேலும் காண்க.நெய்ச் சோறு-120, பாற் சோறு- 168  இன்னபிற உணவு வகைகள்- ஆய்க.
முதன்மை நோக்கு : சமுகவியல்

 பொன் சுமந்த கலம்
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை
                    மாறோக்கத்து நப்பசலையார், புறநா.126 : 14 – 16
சினம் மிக்க படையுடைய சேரன் மேலைக் கடலில் பொன்னைத் தரும் மரக்கலம் (கப்பலை) செலுத்துமிடத்து இடையில் வேறு சிலர் மரக்கலம் செலுத்த முடியுமோ?
மேலும் காண்க : பொன்படு  மால்வரைக் கிழவ..  புறநா.201 : 18, கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர,  202 :3,
பழந்தமிழகத்தில் பொற் சுரங்கம் இருந்ததா? –ஆய்க.

முதன்மை நோக்கு :  தொல்லியல் , நிலவியலாய்வு அணுகுமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக