சனி, 12 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-194.

 

தன்னேரிலாத தமிழ்-194.

முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கின

தலைமுடி சான்ற தண்தழை உடையை

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்.” –அகநானூறு, 7.

 அறிவினையுடைய இளைய மகளே…! நினக்கு முலைகள் அரும்பின ; விழுந்தெழுந்த கூரிய பற்கள் ஒளி கொண்டன ;  கூந்தல் முடித்தல் அமைந்தாய் ; குளிர்ச்சி பொருந்திய தழை உடை கொண்டாய் ஆதலின், நின் தோழியரோடு சுற்றித்திரிய எங்கணும் போகாதே..! –செவிலி கூற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக