அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14)- இலக்குவனார் திருவள்ளுவன்
| 8:14 PM (44 minutes ago) | ![]() ![]() | ||
|
அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14)- இலக்குவனார் திருவள்ளுவன்
அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14)
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, 01.01.1960 முதல் செயல்பட்டு வருகிறது. அலுவலகங்களில் ஆட்சித்தமிழைச் செயற்படுத்தும் முன்னணித் துறைகளுள் ஒன்றாக இத்துறையும் உள்ளது. இருப்பினும் முழுமையாக நிறைவேற்ற வேண்டி வாழ்த்துகிறோம். பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து விட்டு எதற்கு அறக்கேடு என்று கூற வேண்டும என்ற எண்ணம் வருகிறதா? தமிழர்களால் தமிழர்
வழக்கமான அலுவலக நடைமுறைகளில் தமிழைப் பயன்படுத்தினாலும் திருக்கோயில்கள் தொடர்பானவற்றில் இப்போதைய கோயில் வழக்காறுகளுக்கேற்ப தமிழ்ச்சொற்களையோ தமிழ்த்தொடர்களையோ காணமுடிவதில்லை.
ஆகமம் என்றும் இல்லாத வழக்கங்கள் என்றும் சொல்லிக் கோயில் பூசாரிகளும் பி
தமிழர்களின் கோயில்களில் உள்ள இறைவன்-இறைவிப் பெயர்கள் தமிழாகத்தான் தொடக்கத்தில் இருந்தன. தமிழர்களின் கோயில்களில் தமிழ்க்கடவுள்களுக்கு வேறு எம்மொழியில் பெயர்கள் இருக்கும்? பின்னர் சிறு கூட்டம் ஒன்று மெல்ல மெல்ல இறைவன்-இறைவிப் பெயர்களைச் சமற்கிருதமயமாக்கி வந்தனர்; வருகின்றனர். சில தமிழ்ப்பெயர்களை மாற்ற முடியாததால், இரு வகையாகவும் குறித்து வருகின்றனர். சமற்கிருதப் பெயர்களுக்கேற்ப இறைவன் இறைவி கு
கேரளாவில் உள்ள கோயில்களில் கூ
சான்றாக அருள்மிகு வண்டுசேர் குழலி உடனாய அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் > அருள்மிகு சேசபுரீசுவரர் திருக்கோயில்; திருமணிக்கூடம் – மணிக்கூடநாயகன் > வரதாசப் பெருமாள் / கசேந்திரவரதன்; திருமகள் நாச்சியார்-சிரீதேவி; தஞ்சைப் பெருவுடையார் கோயில் (எ) பிரகதீசுவரர் கோவில்; பழமலைநாதர் (எ) விருத்தகிரிசுவரர்; விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி; பாலாம்பிகை (எ) இளைய நாயகி; திருவெண்காடு கோயில் (எ) சுவேதாரண்யேசுவரர் கோயில் என இரு முறைகளில் குறிப்பிடுவதைக் காணலாம். இவ்வாறு தமிழை ஒரேயடியாக ஒழிக்க முடியாத இடங்கள் எங்கெங்கும் கடவுளரின் தமிழ்ப்பெயர்களை அகற்றுவதற்காகச் சமற்கிருதப் பெயர்களை இணைத்துப் பரப்பி வருகிறார்கள்..
2020 சூன் 14 இல் அப்போதைய தமிழ்வளர்ச்சி அமைச்சர் மாஃபா பாண்டியராசன், “தமிழகத்தில் சமசுகிருதத்தில் உள்ள கோவில்கள் மற்றும் தெய்வங்களின் பெயரை தமிழில் மாற்ற முதல்வரிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. தமிழ் வழிபாட்டிற்காக நடவடிக்கைகள் எடுத்து வருவைதப் பார்க்கும் பொழுது, இப்போதைய அரசிற்கும் இதே எண்ணம்தான் எனத் தோன்றுகிறது. ஆனால் விரைவாக நடடிக்கை எடுத்துத் தமிழ்நாட்டுக் கோயில்
மிருத்சங்கர அரணம், அங்குராப்பணம், இசுதானிகர், பூர்ணாஃகூதி தீபாராதனை, சீர்ணோத்தாரண அட்டபந்தன, கும்பாபிசேகம் என்பன போன்ற கோயில் நிகழ்ச்சிகள், சடங்குகள் முதலியவற்றைக் குறிப்பிடும் பொழுது தமிழை விரட்டி விட்டு இடையிலே வந்த ஆரியத்தை வீற்றிருக்கச் செய்துள்ளார்கள். இவற்றை எப்பொழுது நாம் துரத்தப் போகிறோம்?
தமிழ்த்தெய்வங்களைப் புறக்கணிக்கும் போக்கு ஆரியர்களால் உருவாக்கப்பட்டு நிலைத்துவிட்டது. தமிழ்த் தெய்வம் முருகனை உருத்திரன் மகனாக்கி, விட்ணுவின் மருமகனாக்கியமை, முருகனின் மனைவியான வள்ளி குற மகளாததால் அவளை இரண்டாம் மனைவி ஆக்கியமை. முதல் மனைவியாக இந்திரனின் வளர்ப்பு மகளான தெய்வானையை ஆக்கியமை, இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் நுழைந்த விநாயகரை முருகனின் அண்ணனாக்கியமை, எனத் தமிழ்கடவுள்களை ஆரிய உறவு
தலப் புராணங்கள் என்ற பெயரில் வரலாற்றைச் சிதைத்தும் திரித்தும் மூடநம்பிக்கைகளைப் புகுத்தியும் எழுதப்பட்டவற்றை நீக்கி உண்மையான வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும். ஒரு சான்று: சீர்காழி தலப் புராணத்தில் சீர்காழி குறித்துப் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில், சீகாளி (சிரீகாளி) சிதம்பரத்தில் நடராசப்பெருமானோ
மற்றோர் எடுத்துக் காட்டு: மதுரை பழமுதிர்சோலையில் உள்ளது நூபரகங்கை. இதன் பழைய பெயர் சிலம்பாறு. சிலம்பு என்பது ஒலித்தல் என்னும் பொருள் உடையது. எதிரொலிக்கும் மலை சிலம்பு என அழைக்கப்பெற்றது. அத்தகைய மலையில் ஓடும் ஆறு சிலம்பாறு எனப்பட்டது. ஆனால் சிலம்பு என்பதைக் காலில் அணியும் அணிகலனாக எண்ணித், திருமால் காலில் இருந்த சிலம்பு விழுந்த இடம் எனக் கதை கட்டி விட்டனர். காலில் அணியும் சிலம்பிற்கு சமற்கிருதத்தில் நூபுரம் என்று பெயர். எனவே, நூபுர கங்கை எனத் திரித்து விட்டனர். இவ்வாறுதான் ஒவ்வோர் கோயில் வரலா
எனவே, அரசு உண்மையான தலப் புரா
அறநிலையத்துறை தமிழறமும் இறை
தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)
– இலக்குவனார் திருவள்ளுவன்
காண்க:
இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்!
தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக