செவ்வாய், 4 நவம்பர், 2025

தமிழமுது –162 – தொல்தமிழர் இசை மரபு:................முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –162 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 22.

தமிழிசை.

முனைவர் ராம. கெளசல்யா.

 

 தஞ்சாவூர் க. பொன்னையா பிள்ளை, தஞ்சை நால்வர் வழி வந்தவர். கீதம் முதல் தில்லானாவரை அனைத்தையும் தமிழில் இயற்றித் தந்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகள், மதுரை பாஸ்கரதாஸ் போன்றோர் தமிழ் நாடக மேடையை இசையால் வளப்படுத்தினர்.  தஞ்சாவூர் சங்கர அய்யர், லால்குடி ஜெயராமன் போன்ற  இசைக்கலைஞர்கள் இயலிசைப் புலவர்களாக இயற்றியவை மேடைகளில் பிரபலமாக விளங்குகின்றன.

 

 20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் பள்ளிக்கல்வி கூட எட்டாக்கனியாக இருந்தபோது  பெண்கள் இல்லத்தரசிகளாகத் திகழ்ந்துகொண்டு ஏராளமான கும்மி, கோலாட்டம், ஓடம், கப்பல் போன்ற பல நாட்டுப்புற வடிவங்களில் பாடல்கள் இயற்றினார்கள் என்பது வியப்புக்குரிய செய்தியாகும். இவற்றுள் பெரும்பாலானவை அச்சு இயந்திரத்திலும் ஏறின.

 ஆனால், இவ்வாறு காலந்தோறும் வழிவழியாக வந்த தமிழிசை இடையில் ஓர் சவாலை எதிர்கொண்டது. மேடையில் தமிழிசை குறையத் தொடங்கியது. பின்னர் துக்கடா நிலைக்கும் தள்ளப்பட்டது. ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், ஆர்.கே. சண்முகம் செட்டியார், கல்கி, ராஜாஜி, டி.கே.சி. போன்றோர் தமிழிசைக்காகக் குரல் கொடுத்தனர்.

.

 அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், எம்.எம். தண்டபாணி தேசிகர், எம்.எஸ். சுப்புலட்சுமி,, டி.கே. பட்டம்மாள், போன்ற இசைக்கலைஞர்கள் துணை நின்றனர். தமிழிசை புத்துயிர் பெற்று மேடைகளில் இடம்பெறலாயிற்று. முற்றிலும் கம்பராமாயணப் பாடல்கள், திருப்புகழ், ராம நாடகக் கீர்த்தனைகள் போன்றவற்றைக்கொண்டு மேடை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சங்கப்பாடல்கள், பழைய பாடல்கள் ஆகியவை புதிதாக  இசைக்கப்பட்டு இசை, நாட்டிய மேடைகளில் இடம் பெறுகின்றன.

 

 தமிழர்களின் தனிப் பெரும் அடையாளமாகிய ………..

………………தொடர்கிறது………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக