வியாழன், 1 ஜனவரி, 2026

தமிழமுது –172 – தொல்தமிழர் இசை மரபு: சான்றோர் ஆய்வுரை – 32.

 தமிழமுது –172 – தொல்தமிழர் இசை மரபு: 

                       சான்றோர் ஆய்வுரை – 32. 

            திராவிடர் இசை. (தமிழர் இசை ) ப. தண்டபாணி, பி..,எம்.எசு.சி 

                 (அடைப்புக் குறிகள்எம்மால் இடப்பட்டவை 

நளினக் கலைகளில் இசை முதன்மையுடையது ; இதன் சிறப்பு வடிவமற்ற ஒலி அலைகளை அளவாக்கி செவிமடுக்கச் செய்து இன்ப மூட்டுவதுஇது குறித்து ப. தண்டபாணி அவர்கள் ஆய்ந்தறிந்து பல செய்திகளை இந்நூலில் வழங்குகிறார்.” 

.......இசைக்கலை என்பது சாம வேதத்திலிருந்து தோன்றிய கலையன்றுஇசைத்திறம் எந்தமுனிவராலும் ஒரு காலத்தில் திடீரென உருவாக்கப்பட்டதும் அன்று. 

ு எந்த மொழி இலக்கியத்திலும் இசையும் ஓர் அங்கமாகவில்லைஆடல்பாடல் தொழில்களைப் புரிந்தால் அவர்களைப் பிராமணப் பந்தியிலிருந்து விலக்கவேண்டும் என்னும் முறை உபநிடத்தில் காணக்கிடக்கிறது. ( இதிலிருந்து அறிந்து கொள்வத என்ன..? பிராமணர்கள் இசை கற்கக்கூடாது என்பதுதான் ஆனால் இன்று.....!) 

இசையற்ற முறையில் பாடம் ஒப்பிப்பது போன்றுதான் ஆரியர் முதலில் வேதம் ஓதி ந்தனர். 

வேதகாலத்து  இருடிகள் தங்கள் மந்திரங்களை இசை நயமில்லாமல் ஓதியது காதுக்கு நாராசமாகத் தவளை கத்துவதுபோல் இருந்தது. ( இதனால் இருடிகளுக்கு இசையறிவி இல்லை என்று பெறப்படுகிறது.) 

ஆதாரச் சுரம் ஒன்றை அமைத்துக் கொள்ளாமலும்சரியான இசைக் கணக்கு முறையும் சுரங்களின் இடைவெளி மைப்புமின்றி அவரவர் விரும்பியவாறு தாறுமாறாகப் பாடப்பட்டதுதான் சாமகானம்சாமகானம் ஒழுங்கற்ற இசை என்று மனுவே கூறியுள்ளார். 

பண்ணப்படுவது பண்ணாகும்ஒலி பிறக்கும் நெஞ்சுமிடறுமுதலிய எட்டு இடங்களிலும் ஒலிகள் பண்ணப்பட்டு மூலாதாரம் தொடங்கித் தலையுச்சி வரை செல்லும். 

காற்றை அடக்கி நாதத்தை நரம்புக் கோவைகளால் வகைப்படுத்திப் பாடுதல் பண்ணாகும். 

 திராவிடர் (தமிழர் )  பண்களைத் தாய்ப்பண்கள் என்றும் சேய்ப்பண்கல் என்றும் பிரித்தனர். ஏழு நரம்புகளையும் கொண்ட தொகுதிகளை மட்டும் பண் என்றும் ஆறு நரம்புகளைக் கொண்ட தொகுதிகளைப் பண்ணியல்  என்றும் ஐந்து நரம்புகளைக் கொண்ட தொகுதிகளைத் திறம் என்றும் நான்கு நரம்புகளை மட்டும் கொண்ட தொகுதிகளைத் திறத்திறம் என்றும்  முற்காலத்தில் பெயரிட்டு ழைத்தனர் 

இசையில் முதன்முதலில் பண் அல்லது இராக முறையை ஏற்படுத்தியவர்கள் திராவிடர்கள (தமிழர்களேஎன்பது உறுதியாகின்றது 

ஒவ்வொரு தமிழனும் இந்நூலைக் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டும் - தமிழரின் தொன்மை இசைக்கலை = திராவிடர் (தமிழர்இசை எப்படி கருநாடக இசையாக மாறிவிட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். 

 இந்நூல் ஆசிரியர்...................................தொடரும்...................... 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக