புதன், 6 மே, 2026

தமிழமுது –284– தொல்தமிழர் இசை மரபு:144...திருமூலர் -திருமந்திரம் : சித்தர் மரபு.

 தமிழமுது –284– தொல்தமிழர் இசை மரபு:144நீட்சியும் -  வீழ்ச்சியும்.எழுச்சியும் ;  ஆடல் பாடல் கூத்து (நாடகம்) 

இசைமரபு - மறுமலர்ச்சி -  திருமூலர் -திருமந்திரம் : சித்தர் மரபு.  

கி.பி.300 முதல் 600வரை பல்லவர்கள் காஞ்சியிலிருந்து தொண்டைமண்டலத்தை ஆட்சி புரிந்தனர்அவர்கள் காலத்தில் வடமொழியைப் போற்றி வளர்த்தனர்எனவே அக்காலத்தில் சமஸ்கிருதம் உயர்வான மொழி எனும் மனப்பான்மை மக்களிடையே லிமை பெற்றிருந்ததுஇந்த நிலையில் திருமூலரின்  திருமந்திரம் எனும் ஒப்பற்ற சைவ நூல் எழுந்ததுஅந்த நூல் வடமொழியையும் தமிழ் மொழியையும்  சமநிலை உடையதாகவே இறைவன் தோற்றுவித்தான் என்று கூறித் தமிழ்் செம்மொழி என்பதை உறுதிப்படுத்தியது.  

 “மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று   

ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து   

ஆரியமும் தமிழும் டனே சொல்லிக்  

காரிகை யார்க்குக் கருணை செய்தானே.” என்பது திருமந்திரம். 

 

 திருமூலர் காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய சாத்திர நூல்கள் வடமொழியிலேயே பெரும்பாலும் இருந்தன. இயற்றப்பட்டனஇந்த நிலையை முதன மு்தலாக மார்றித் தமிழில் சாத்திரம் படைத்தவர் திருமூலரே.  “என்னை நன்றாகப் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே “ என்று பேசுகின்றார்திருமூலர்ஆகதமிழில் சத்திர நூல் படைப்பது இறைவன் திருவுளச் சம்மதமே என்பதை உணர்த்துகின்றன மேற்சுட்டிய ரிகள்வடமொழிச் செல்வாக்கு ஓங்கியிருந்த அக்காலத்தில்  தமிழில் தோன்றிய முதல் சைவ சித்தாந்த நூல் திருமந்திரம் என்பது போற்றுதற்குரியதாகும்.  

தமிழ்ச் சித்தர் ஏதேனும் ஒரு வகையில் மக்கள் தொண்டினை வாழ்நாள் முழுவதும் ெய்து கொண்டே இருந்தனர்மக்களின் உயிர்ப்பிணியாக இருக்கும் பசிப்பிணியைப் போக்கும் மாபெரும் தொண்டினையும் உடற்பிணியாகிய நோய்களை நீக்கும் மருத்துவத்தையும் தன்னை அறியும் தவத்தால் நீங்கும் பிறவிப் பிணியைப் போக்கும் தொண்டினையும் செய்தனர் 

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை   

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை  

யாவர்க்குமாம் உண்ணூம் ோது ஒரு கைப்பிடி   

யாவர்க்குமாம் பிறர்க்கு ன்னுரை ானே  

என்று மனித சமுதாயம் வாழ்வாங்கு வாழம் வழிமுறைகளைப் பகுத்தறிவுடன் பல்லுயிர் ோற்றி வாழ்தல் நன்றாம். (சான்றோர் வழங்கிய சிறப்புச் செய்திகளுக்கு நன்றி.) ..........................தொடரும் ...............................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக