வியாழன், 2 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-25. ..தொல்காப்பிய உரையாசிரியர்கள்:

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-25.  

            

                ொல்காப்பிய ரையாசிரியர்கள்:   

                          தொல்காப்பியம  முழுமையான முதல் இலக்கணநூலாகத் தோன்றிப் பன்னூறு ஆண்டுகளாகக் கற்றறிந்தோர் கையில் மட்டுமே தவழ்ந்து வந்த இந்நூலுக்குப்   புலமை சான்ற சான்றோர்கள் உரை குத்தனர். உரைவளம் கண்ட தொல்காப்பியம்  உலக அளவில் தமிழின் ொன்மைச்சிறப்பினை ஒளிரச்செய்தது.  

                                  நூலுக்கு உரைகொள்ளுதல் என்பது பழைய வழக்கு, நூலுக்குப் பொருந்துமாறு உரைத்தலும், ஐயமும் மருட்கையும் நீக்கி இதற்குப்பொருள் இது என்று தெரிய உரைத்தலும் உரை என்பது தொல்காப்பியம். கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத் திரட்டல், அகலங்கூறல் என்னும் நான்கு இயல்பை இறையனார் களவியலுரையும், சூத்திரத்தின் உட்பொருள் உரைத்தல், சொற்பொருள் உரைத்தல், தொகுத்துரைத்தல், பொருள் தூய்மைக்காக வினாவும் விடையும் உள்ளுறுத்து விளக்கி உரைத்தல் என்றும் நான்கியல்பை நம்பியகப்பொருளும்  - பாடம் ருத்து, சொல்வகை, சொற்பொருள் ,  தொகுத்துரை, உதாரணம் ,வினா விடை விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரியவசனம் என்னும் 14 வகைகளைக் கூறுவது பொதுவுரை என்றும் அப்பொதுவுரை காண்டிகை,  விருத்தி  என்று இரண்டாகும் என்று நன்னூலும் உரை இயல்பை விளக்குகின்றன. 

 உரையின் சிறப்பினை, 

பொழிப்பு அகலம் நுட்பம் எச்சம் இந்நான்கின்   

கொழித்து அகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்   

நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட   

உரையாமோ நூலிற்கு நன்கு. (319) என்று நாலடியார் கூறுகிறது. இவ்வண்ணம் சிறப்புடைய உரை எழுதும் முயற்சி சோழர்காலத்தில் மிகப்பலவாகத் தோன்றிப் பிற்கால உரைநடை வளர்ச்சிக்கு வழிவகுத்தது. 

              உரை வரையும் பேரியக்கத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்து தலைமை ஏற்பவர் தொல்காப்பிய உரையாசிரியர்  இளம்பூரணர் ஆவார். இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.  

                        இவரைத் தொடர்ந்து  சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர், நச்சினார்க்கினியர் ஆகியோர் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியுள்ளனர்.சொல்லதிகாரத்திற்குப் பழைய உரை ஒன்றும் உண்டு.  பொருளதிகாரத்தின் முன்னைந்து இயல்களுக்கும் செய்யுளியலுக்கும், எழுத்ததிகாரத்திற்கும் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.பொருளதிகாரத்தின் பின் நான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரை உள்ளது. இவ்வுரையாசிரியர்கள் அனைவரும் கி.பி. 11 முதல் 14ஆம் நூற்றாண்டுக் கால எல்லையுள் வாழ்ந்தவர்கள். 

இளம்பூரணர் உரை.....................தொடரும்.....................  

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக