சனி, 1 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-53.- ஓர் அறிவியல் அறிஞர்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-53.- ஓர் அறிவியல் அறிஞர் 

ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.) 

                          ”தொல்காப்பியம் புள்ளி:

                   அடுக்கிய கோடி பெறினும்.... (குறள்-954) என்று திருவள்ளுவர் கோடான கோடியைக் குறிப்பிடுகின்றார். தமிழில் பேரெண்களைக்குறிக்கும் குறியீடுகள்: ( ள = 100. ; சூ = 1000. ; ளு = 10 இலட்சம்.) புழக்கத்தில் இருந்துள்ளன. 

                          இலட்சம் என்பதை அன்று நூறாயிரம் என்றும் கோடியை நூற நூறாயிரம் என்றும் குறித்தனர். பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனார் கரிகால் பெருவளத்தானிடம் பதினாறு நூறாயிரம் பொன் பரிசு பெற்றார். தொல் ரோமானியர் பேரெண்களைக்குறிக்கக் குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளனர். 

                 I = 1 ; V = 5. ; X = 10, ; L = 50. ; C = 100. ; D = 500/ ; M = 1000.  

                     V= 5 Two Vs = X.  C= Centum ; M = Mille.  

 சுன்னம் / சுழி / 0 / Zero: தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுழியைக் குறித்துள்ளனர். பரிபாடல் சுழியைப் பாழ் என்று குறித்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில் சுன்னம் என்னும் குறியானது அரேபியர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது . எனினும் அரேபிய எண் முறையில் 0 = 5 என்றிருந்தது. சுழியைக் குறிக்க அவர்கள் ஒரு புள்ளியை மட்டுமே (Zero is Simply a Dot) பயன்படுத்தினர். 0 குறியீடு இந்தியாவிலிருந்து அரேபியா வழியாக ஐரோப்பா சென்றடைந்தது.  

                              தமிழ் எழுத்துகள் பலவும் சுழி உடையனவாக இருக்கின்றன. காலப்போக்கில் நிகழும் எழுத்து வடிவ வளர்ச்சி (மாற்றம்)  தமிழிலும் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் தொடங்கி இன்றைய வடிவம் நோக்கி வளர்ச்சி அடைந்தது. தமிழில் 10 என்பதைக் குறிக்கும் தொன்மைக் குறியீடு ஒன்றும் சுழியும் இணைந்ததைப் போல (ய) இருந்தது. எண்களின் எண்ணிக்கை வளரத் தொடங்கியது, ஒன்றுமில்லை என்பதைக்குறிக்க ஒரு குறி 0 கண்டுபிடித்தனர். இக்குறியீடு ஈரிலக்க (Decimal System)  முறைக்கு வழிவகுத்தது. கணக்கியலுக்கு இந்தியர்களின் (தமிழர்)  அரிய கொடை என்று உலகம் வியந்து பாராட்டுகின்றது. 

..................... நுண்ணளவு (பின்னங்கள் )  ....................தொடரும்................................  

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக