வெள்ளி, 30 மார்ச், 2018


திருக்குறள் -சிறப்புரை :832
பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.--- ௮௩௨
( பேதைமையுள் எல்லாம் ; தன்கண்.)
அறியாமை எல்லாவற்றுள்ளும் மிகுந்த அறியாமையாவது ஒழுக்கக்கேடான செயல்களைத் தான் விரும்பிச் செய்தலாம்.
“ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை” –முதுமொழிக்காஞ்சி.
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம் கற்றலைவிடச் சிறந்தது ஒழுக்கமுடன் வாழ்வது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக