திங்கள், 28 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –124 : 42. கலங்கரை விளக்கம்

தொல்தமிழர் அறிவியல் –124 : 42. கலங்கரை விளக்கம்

42. கலங்கரை விளக்கம்

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட                                   
 கோடு உயர் திணி மணல் அகந்துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய
                     மதுரை மருதன் இளநாகனார், அகம். 255 : 1-6
உலகமே கிளர்ந்து எழுந்தாற்போன்ற அச்சம் பொருந்திய நாவாயானது, வேகமாக வீசும் இயல்பினதாய காற்று அசைத்துச் செலுத்த, இரவு பகலாக ஓரிடத்தும் தங்காது புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப் பரப்பைக் கிழித்துக் கொண்டு சென்றது.நாவாய் ஓட்டியும் கரை உயர்ந்த மணல் செறிந்த துறையிடத்தே, ஒளி பொருந்திய விளக்கினால் செல்லும் இடம் அறிந்து செலுத்த .....

கலங்கரை விளக்கம்
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
 துறை பிறக்கு ஒழியப் போகி..
   கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  346 -351
                 வானம் விழாதபடி முட்டுக்காலாக ஊன்றிவைத்த ஒரு அற்றுக்கோல் போல விண்ணைத் தீண்டும்படி உயர்ந்து, ஏணி சாத்தியும் ஏறுதற்கு அரிய தன்மையினையுடையதாய், வேயாது, சாந்து பூசப்பட்ட மாடத்திடத்தே, இரவு நேரத்தில் கொளுத்திய விளக்குச் சுடர் , திசைத் தப்பிப் பெருங்கடற்பரப்பில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும் நீர்ப்பாயல் (மாமல்லபுரம்) துறைமுகம்..
                              ( கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை அதன் மதலை (விழுதுகள்) தாங்கி நிற்பது போலக் கலங்கரை விளக்கம் வானம் ஊன்றிய மதலை போல விளங்குகிறது.
அறிவியல் நோக்கு
                           Indians today might like to stereotype Gujaratis as the nation's most mercantile community, but at one point around 2,000 years ago, Tamil was the lingua franca of traders across the South East Asian seas.
                      
                          Star South Asia expert and museum curator John Guy is in India to explain how Tamil merchants, who are prominent in the early history of the region, became integral cultural and political influences in courts across South East Asia.
“You get a sense of the role of early and medieval merchant guilds in the Deccan and Tamil Nadu and Kerala,” Guy said in a conversation with Scroll.in. “You know how common they are in India, but then you find their inscriptions in places like Sumatra and Thailand. It is astonishing how they got around. They were busy boys, travelling far and wide.”

                              On Friday, he will give a talk in Mumbai about his findings Titled “In Search of Suvarnabhumi: Tracing Tamil Merchant Traders in First Millennium Maritime Southeast Asia”.
-Sea Trade : Mridula Chari ,Net.----தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக