திங்கள், 14 மார்ச், 2022

 

தன்னேரிலாத தமிழ் –413: குறள் கூறும்பொருள்பெறுக

 

402             

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.


கல்வியறிவு இல்லாத ஒருவன், சான்றோர் அவையேறி உரையாற்றி, அனைவரையும் ஈர்க்க முயல்வது, இரண்டு கொங்கைகளும் இல்லாத பெண்ஒருத்தி, தன் பெண்ணியல்பைக் காட்டி, ஆடவரை ஈர்க்க முனைவது போன்றதேயாம்.


அவையஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் கல்லார்

 அவையஞ்சா ஆகுலச் சொல்லும் நவையஞ்சி

 ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்

 பூத்தலின் பூவாமை நன்று.” -  நீதிநெறி விளக்கம், 6.


கற்றவர்கள் குழுமியிருக்கின்ற அவைக்கு அச்சப்பட்டு, உடல் நடுக்கம் கொள்வோன் கல்வியறிவும்; கற்றோர் அவைக்கு அஞ்சாத கல்லாதவர்களின் ஆரவாரம் மிக்க வீண் சொல்லும்; குற்றத்திற்கு அஞ்சிப் பிறர்க்குக் கொடுத்து உண்ணாதவர்களின் செல்வமும்; வறுமையால் வாடுபவர்களுக்குச்  சொல் அளவோடு நிற்கும் ஈகை முதலிய இனிய தன்மைகளும் ஆகிய இவை உண்டாவதைக் காட்டிலும் உண்டாகாமல் இருப்பதே நன்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக