ஞாயிறு, 8 அக்டோபர், 2023

--சிறுகதை --- பணம் பதினொன்றும் செய்யும்-2

 

--சிறுகதை --- பணம் பதினொன்றும் செய்யும்-2

                           நாளும் வளர்ந்துவரும்  மனைவியின் கேடுகெட்ட செயல்களைக்கண்டு மனம் நொந்த சங்கரன், ஒன்றும்  பேசமுடியாமல் கண்களால் அவளைச் சுட்டெரித்து விட்டுச் சென்று விடுவார்.

                    நூலைப்போலச் சேலை தாயைப்போலப் பிள்ளைஎன்ற பழமொழி அழிந்துபோகாமல்  நித்யா காப்பாற்றிவந்தாள். காலையில் கல்லூரிக்குச் சென்றால் இரவு பத்து மணிக்குத்தான் வீட்டிற்கு வருவாள்.  சங்கரன்  மகளின் நடவடிக்கை சரியில்லையே என்று வருத்தப்பட்டு ஒரு நாள்  என்னம்மா எங்கபோயிட்டு வர்ற…” என்று  கேட்டு முடிப்பதற்குள் குணவதி அதட்டினாள்அவள் எங்க போயிட்டு வந்தா ஒங்களுக்கு என்னஒங்க வேலைய பாருங்க…”  எல்லாம் கைமீறிப் போய்விட்டது என்று உணர்ந்த சங்கரன் சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டார்.

எங்கே போகிறோம் என்று தெரியாமல் கால்கள் அவரை அடிமேல் அடியெடுத்து வைத்து இழுத்துச்சென்றன ….! 

                          பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் பிள்ளைகள் தலயில் விடியும் என்பதை நன்கு உணர்ந்த சங்கரன், விம்மி வெடித்துவிடும் இதயதோடு, கையில் இருந்த செல்போனை  ஓங்கி தரையில் அடிக்க அது சுக்குநூறாகச் சிதற , எல்லாம் முடிந்தது என்ற முடிவோடு தொடர்ந்து நடந்து ரயில் நிலைத்திற்குள் புகுந்தார். அங்குநின்று கொண்டிருந்த ரெயிலில் ஏறி அமர்ந்தார் , அது எங்கே போகிறது என்று கூட அவருக்குத்தெரியாது  சட்டைப்பையில் இருக்கும் பணத்திற்கு எவ்வளவு தூரம் போகமுடியுமோ அவ்வளவு தூரம் சென்று மைசூரில் இறங்கி குடகு மலை நோக்கிச் சென்றடைந்தார்.நான்கு நாட்களாக உணவில்லை, உறக்கம் இல்லை, சர்க்கரைநோய்க்கு மருந்தும் எடுத்துக்கொள்ள வில்லை…! அவர் உடலில் உயிர் தங்குவதற்கு இடமில்லை. சாலை ஓரத்தில் சரிந்து கிடந்தார், இரக்கப்பட்டவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அவ்வளவுதான் கேட்பாரற்றுக்கிடக்கும் பிணப்பட்டியலில் சங்கரன் பெயரும் இடம் பிடித்தது.

……………………………………………தொடரும்……………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக