செவ்வாய், 17 அக்டோபர், 2023

சங்கு- ஓர் ஆய்வு –6.

 

சங்கு- ஓர் ஆய்வு –6.

தமிழர் பண்பாட்டில் சங்கு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய நூலாகும். சங்கின் இனங்களும் வளமும் என்பதில் தொடங்கி இலக்கியங்களில் சங்கும் அதன் பெயர்களும், தமிழர் பண்பாட்டிலும் வழிபாட்டிலும் அதன் பயன்பாடு, சங்கின் மீதான நம்பிக்கைகள், இசைக்கருவி என்ற நிலையில் சங்குமருத்துவத்தில் சங்கு, சங்குத் தொழில் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆராயப்படுகின்றன.

 

சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது. இந்து சமயம் , வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் சுவாமி வழிப்பாட்டில் சேகண்டியுடன், சங்கொலியும் இசைக்கப்படுகிறது.

தமிழர் இசைக் கருவிகள் இரு கூறாகப் பிரிக்கப்படுகிறது. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.

 

………………………………..தொடரும்……………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக