தமிழமுது – 51.
கடவுளைப்பற்றி….!
தத்துவஞானம்:
பண்டைய காலந்தொட்டு இன்றுவரை கடவுளைப் பற்றிய சிந்தனைகள்
வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கடவுளுக்கான கதைகளும் புனைந்துரையாகவே இருப்பதால் மக்களின் அறியாமையால்
அவை அவர்களின் ஆழ்மனத்துள் குடியேறிவிடுகின்றன. குழந்தை பிறந்தது முதல் கடவுளைப்பற்றிய
நம்பிக்கைகள் தாயால் ஊட்டப்பெற்று வருகின்றன. கிரேக்கத் தத்துவஞானிகளின் கருத்துகளை , செர்மானிய
தத்துவஞானிகள் விரித்துரைத்துள்ளனர்.
”செர்மனியக் கருத்துமுதல் வாதத்தின்
மூலச் சிறப்பான தத்துவ ஞானம் இளைஞரான மார்க்சுக்கு ஏன் நிறைவைத் தரவில்லை என்பதை 1837இல் எழுதிய ஒரு கவிதையில் காணலாம்.
காண்டையும் ஃபிக்டேயையும் பற்றி
அவர் எழுதியிருப்பது கெகலுக்கும் பொருந்தும் என்பது உண்மையே, முன்பு கடவுள்கள் பூமிக்கு
மேலே வசித்தார்கள் என்றால் இப்பொழுது அதன் மையமானார்கள். அஃதாவது ‘கடவுள்கள்’ தூக்கி
எறியப்படவில்லை, அவர்கள் அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு ‘தன்னிலைப் பொருளிலிருந்து’
நமக்குரிய பொருளாக’ மாற்றப்படுகிறார்கள். ஏனென்றால் யதார்த்தம் தெய்விகக் கருத்து குடிகொண்டிருக்கும்
ஆலயம் என்று அறிவிக்கப்படுகிறது.”
கடவுளை ஆராயக்கூடாது
என்றால் அவர் அந்த அளவுக்கு ‘வ்ல்லமையானவரா..?
என்று சோதித்துப் பார்க்க விரும்பினார் மார்க்சு. ” இயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால்
கடவுள் இருக்கிறார் என்று’நிரூபணங்களில்’ ஒன்று கூறுகிறது. ஆனால் இயற்கை அமைப்பின் ‘பகுத்தறிவு தன்மை’ கடவுள்
மிகையானவர், கடவுள் தேவையில்லை என்பதை நிரூபிக்கிறது. உலகம் பகுத்தறிவுடன் தோன்றவில்லை
என்பவருக்குக் கடவுள் இருக்கிறார்; அல்லது பகுத்தறிவு இல்லாததனால் கடவுள் இருக்கிறார்.’
இந்த முடிவு அக்காலத்துக்கு முற்றிலும் துணிவானதாகும்.
மனித சுய உணர்வே “உயர்ந்த கடவுள்”
அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்று மார்க்சு உறுதியாகப் பிரகனம் செய்தார். “ உண்மையைச்
சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்” என்று புரோமித்தியசு துணிச்சலாக்க்
கூறியதை, மார்க்சு, “ வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும் எதிரானதாக திருப்பினார்,” இந்தத் துணிவான கருத்து
மத எதிர்ப்பு மட்டுமல்லாமல் அரசியல் தன்மையும் கொண்டிருந்தது.
…………………..தொடரும்……………………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக