தமிழமுது – 56.
கடவுளைப்பற்றி….!
மதம் – மார்க்சீய நோக்கு ;
மார்க்சின் வாழ்க்கை முழுவதிலும்
அற்பவாதிகள் (மூன்றாம் நெப்போலியன் முதல் பத்திரிகை நிருபர்கள் வரை) அவதூறுகள், ஒடுக்கு
முறைகள் பொய்களின் மூலமாக அவரைப் பழிவாங்குவதற்கு முயன்றார்கள். அவை பலனளிக்கவில்லை, அவருடைய புத்தகங்களை முற்றிலும்
புறக்கணிப்பதன்மூலம் பழிவாங்கினார்கள் எனினும் எல்லாக் கடுமையான சோதனைகளுக்குப் பிறகும் எதிலும் அற்பவாதிகளுக்கு விட்டுக்கொடுக்கவில்லை.
“அற்பவாதிகளுக்கு கீழ்நிலையில் இருக்கவில்லை, எப்பொழுதுமே அவர்களுடன் போராடுவதற்குத்
தயாராக இருந்தார். “அற்பவாதிகளுக்குக் கீழே இருப்பதைக்காட்டிலும் அற்பவாதிகளுக்கு எதிர்ப்பு
என்பது நமக்கு நல்ல மூதுரையாகும் என்று மார்க்சு ஒரு கடிதத்தில் எழுதினார்.
அற்பவாதி விஞ்ஞானத்துறையில் உண்மையைத் தேடுவதற்கு மாறாக , உண்மையை மறைப்பதிலும்
திரித்துக்கூறுவதிலும் அக்கறை காட்டுகிறார். தன்னுடைய நேர்மையற்ற மழுப்பலின் மூலம் ஆளும் வர்க்கத்தினருடைய
நிலையையும் அதன் மூலம் தன்னுடைய நிலையையும் வலுப்படுத்துவதற்குப் பாடுபடுகிறார். உண்மைப்
போலியான பேச்சுக்குப் போலி விஞ்ஞான உடையை மாட்டுவதன் மூலம் அற்பவாதி உண்மையைக் குழிதோண்டிப் புதைக்கிறார்.
பாதிரியாரான மால்தசைப் பற்றி மார்க்சு அளவிட
முடியாத அருவருப்பை அடைகிறார். . ஏனென்றால் “இழிந்த கழிசடை: கொடுக்கப்பட்ட விஞ்ஞானக்
கருதுகோளிலிருந்து ( அவற்றை அவர் தவறாமல் திருடுகிறார்.) ஆளும் வர்க்கங்கள் ‘விரும்பக்கூடிய’
முடிவுகளை வருவிக்கிறார், இந்த வர்க்கங்களை ‘மனதில் நினைத்துக்கொண்டு விஞ்ஞான முடிவுகளை
தயாரிக்கிறார். ஆனால் அவருடைய முடிவுகள் ‘ஒடுக்கப்பட்டிருக்கின்ற வர்க்கங்களைப் பொறுத்தமட்டில் ‘இரக்கமற்றவையாகும்’.
விஞ்ஞானத் துறையில் சிந்தனைக் கயமையை இப்படி ஆவேசமாக கண்டிக்கும்போது மார்க்சு தன்னுடைய வெறுப்புகளை மட்டுமல்லாமல் அனுதாபங்களையும் – உண்மையான விஞ்ஞானியைப்பற்றி தன்னலமற்ற
முறையில் உண்மைக்குச் சேவை புரிவதைப் பற்றித் தன்னுடைய கருத்தை வெளிக்காட்டுகிறார்.
மார்க்சை விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி அறிவின் உருவகம் என்று கூறலாம்.
படைப்புச் சிந்தனையே அவருக்கு வாழ்கையில் மிகப்பெரிய ஆனந்தம்.
“நான் மார்க்சையும் எங்கெல்சையும் இன்னும்
நேசிக்கிறேன். அவர்களைத் திட்டுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள் உண்மையான ‘மனிதர்கள்’. நாம் அவர்களிடமிருந்து
கற்றுக்கொள்ள வேண்டும்; அந்த அடிப்படையை நாம் விட்டுவிடக் கூடாது.” – வி.இ. லெனின்.
….. முற்றும்…… ஆதிகாவியங்கள்
…..தொடரும்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக