வெள்ளி, 2 ஜனவரி, 2026

தமிழமுது –173 – தொல்தமிழர் இசை மரபு: ........ சான்றோர் ஆய்வுரை – 33.

 தமிழமுது –173 – தொல்தமிழர் இசை மரபு: 

                       சான்றோர் ஆய்வுரை – 33. 

            திராவிடர் இசை(தமிழர் இசை ) ப. தண்டபாணிபி.., 

                 (அடைப்புக் குறிகள்எம்மால் இடப்பட்டவை. 

இந்நூல் ஆசிரியர்இந்நூல் வெளியீட்டு விழாவின் போது ஆபிரகாம் பண்டிதர் மன்றத்தையும் தொடங்கியுள்ளார். 

ஆபிரகாம்  பண்டிதர் எனும் தனி மனிதர் சுமார் 15 ஆண்டுகள் தொடர்ந்து இசையாராய்ச்சி செய்து ”கருணாமிர்த சாகரம்” என்னும் பெரிய நூலை எழுதி வெளியிட்டார்இதில் தமிழிசையைப்பற்றிய ஆதாரங்களை அவர் அடுக்கிக்காட்டுவது பிரமிப்பை உண்டாக்கக் கூடியதாக உள்ளது.  அவ்வளவு சேதிகளையும் ‘மேலாண்மைக்காரர்கள் தன் வயப்படுத்திக் கொண்டதை ஆபிரகாம் பண்டிதரால் நாம் அறிந்துகொள்கிறோம்.  

 ஆசிரியர் ப. தண்டபாணி அவர்களின் இவ்விழுமிய சிறப்பிற்குரிய பணிகள் குறித்து ‘இலட்சியப்பாதை’ - 11 – 7 – 93. இலட்சியப்பாதை தன் பாராட்டுதல்களைக் குவிக்கிறது. 

ூலாசிரியர் உரை: 

தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் நிருவாகப் பொறியாளராக யான் முன்னாளில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது சென்னைத் மிழ் இசைச் சங்கம் நடத்தும் மாலைநேர இசைக்கல்லூரியில் வாய்ப்பாட்டிலும் வீணையிசையிலும் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றேன், 

தி.மு.க ஆதரவு அதிகாரியென்று குற்றம் சுமத்தப்பட்டு ‘நெருக்கடி நிலை’ காலத்தில் தமிழ்நாட்டின் பொதுப்பணியிலிருந்து1976 ஆம் ஆண்டில் கட்டாய ஓய்வளிக்கப்பட்டபின் தமிழிசை ஆராய்ச்சியிலும் தமிழில் கீர்த்தனைகள் இயற்றுவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன்இதுவரை சுமார் 4000, கீர்த்தனங்கள் இயற்றியுள்ளேன்சில இசையாராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளேன். 

நம் தமிழ் இசையானது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானதெனக் கூறலாம்பின்னாளில் வரலாற்று நிகழ்வுகளால் தமிழ் இசை பிறமொழிகளுக்கு இரையாகிக் ‘கருநாடக சங்கீதம்’ என்ற புதுப் பெயரைத் தாங்கித் தமிழரை விட்டு வெகுதூரம் சென்று விட்டது,.  

ஆகையால் தமிழர்கள் எல்லோரையும் மீண்டும் தமிழ் இசையில் ஈடுபாடு கொள்ள வைக்கத்தான் சமயச் சார்பற்ற முறையில் என் இசைப்பணியைச் செய்து வருகிறேன்அவ்வாறே தமிழில் புதிய கீர்த்தனங்களையும் ஓயாது புனைந்து கொண்டிருக்கிறேன். 

இன்றைய கருநாடக் இசையில் ஏறக்குறைய 2500. இராகங்கள் இருக்கின்றனஅவற்றுள் சுமார் 80 இராகங்கள் இன்றும் தமிழ்ப்பெயர்களைக் கொண்டவையாயுள்ளனஎனக் கண்டு வியந்தேன். 

ஏனெனில் சிலப்பதிகாரத்தில் தமிழ் இசையிலிருந்த 11991, இராகங்களில் பல காலப்போக்கில் மறைந்து போய்விட்டனஎஞ்சியிருந்தவற்றில் இராகங்களின் தமிழ்ப் பெயர்ளையெல்லாம்  ஆரியர் மறைத்துவிட்டுப்  பதிலுக்கு வடமொழிப் பெயர்களாகச் சூட்டிப் பிற்காலத்தில் தமிழ்நாட்டு இசையே கருநாடக இசையாக்கி விட்டனர்எனத் தமிழ் இசை இயக்கம் தோன்றிய கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழிசையை விழாக்களிலும் மாநாடுகளிலும் தமிழ் இசைக் கலைஞர்கள் கிளிப்பிள்ளை போலத் திரும்பக் கூறி வந்துள்ளதை நாம் தொடர்ந்து கேட்டிருகிறோம்ஆனால்எவரும் கருநாடக் இசையில் இன்றளவும் 80 தமிழ் இராகங்கள் இருக்கின்றன என்ற அரிய உண்மையைத் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு கூறியதேயில்லை. ................... ப. தண்டபாணி.சென்னை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக