தமிழமுது –286– தொல்தமிழர் இசை மரபு:146 நீட்சியும் - வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்:
ஆழ்வார்கள் அருளிய பண்ணிசைப் பாடல்கள் :
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள பாடல்கள்:
பொய்கையார்---- 100.; பூதத்தாழ்வார்----100. ; பேயர்---100. ;திருமழிசை ---216.; நம்மாழ்வார்----1296. ; மதுரகவி---11. ; குலசேகரர்----105. ; பெரியாழ்வார்---473. ; ஆண்டாள்---173. ; தொண்டரடிப்பொடியாழ்வார்----55.; திருப்பாணாழ்வார்----10. ; திருமங்கைஆழ்வார்----1253. ; இவையே நாதமுனிகளால் தொகுக்கப்பெற்றவை.
பின்னர் , திருவரங்கத்தமுதனாரின் 108 பாசுரங்களும் சேர்க்கப்பெற்றுப் பாசுரங்களின் எண்ணிக்கை நாலாயிரமாயிற்று. நாலாயிரப் பிரபந்தம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எல்லா ஆழ்வார்களுமே தமிழிலக்கிய இலக்கண மரபுகளையே தம் பாசுரங்களில் கொண்டனர்.
ஆழ்வார்கள் அருளிய பிரபந்தத்தைத் திராவிட வேதம் என்றும் செய்யுளைப் பாசுரம் என்றும் பத்துப்பாசுரங்கள் கொண்டதைத் தசகம் என்றும் பத்துத் தசகங்கள் உடையதை தைப்பத்து என்றும் பதிகத்தைத் திருமொழி அல்லது திருவாய்மொழி என்றும் வழங்குதல் மரபு.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்றவை) செய்யப்பெற்ற திருப்பதிகளின் எண்ணிக்கை 108 ஆகும். இவை வைணவர்களுக்குப் புண்ணியத் திருத்தலங்களாகும். அட்டப்பிரபந்த வெண்பா இந்த 108 திருத்தலங்கள் அமைந்துள்ள நாடுகளைக் குறிக்கும். (சோழநாடு--40 ; பாண்டிநாடு---18. ; சேரநாடு---13. ; நடுநாடு---2. ; தொண்டைநாடு---22. ; வடநாடு---12. ; திருநாடு----1.)
சைவத் திருமுறைகளும் வைணவப் பிரபந்தங்களும் பெருமளவில் ஒற்றுமை கொண்டுள்ளன.
சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் பன்னிருவர்.
சேரமான் பெருமாள் நாயனாரும், குலசேகர ஆழ்வாரும் சேரமன்னர்கள்.
திருமுறையிலும் பிரபந்தத்திலும் ஒவ்வொருவர் பேயாகக் காட்சியளிக்கின்றனர். (சைவம்)-காரைக்காலம்மையாரும் (வைணவம் )-ஆண்டாளும் பெண்கள்.
பாவைப்பாட்டும், திருச்சாழலும், பள்ளியெழுச்சியும், பல்லாண்டும் இரண்டிலும் இருக்கின்றன.
திருமுறையில் பெரிய புராணமும் , பிரபந்தத்தில் இராமானுச நூற்றந்தாதியும் இணைக்கப்பட்டு இரு தொகுப்புகளும் நிறைவுற்றன.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலம் கி.பி. 5முதல் 10ஆம் நூற்றாண்டுவரையில் ஆகும். ..................................தொடரும்...........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக