புதன், 7 அக்டோபர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -35... மழை வழிபாடு

    .................This  Blogger For Sale...................    

 தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -35. 

  முனைவர் இரெ. குமரன்:  

                     தொல்தமிழர் - வழிபாடு - நற்றிணை :  

                       மழை வழிபாடு  

“ அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது    

பணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன்     

அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்     

கடவுள் ஓங்குவரை பேண்மார் வேட்டு எழுந்து     

கிளையொடு மகுழும் குன்ற நாடன்....” 

                                                  புலவர் பெயர் அறியவில்லை, நற். 1- 5.    

                                   தோழி..! அமர்த்த கண்ணை உடைய ஆமானின் அரிய மார்பிடத்தே பாய்ந்து த்ங்காடு குறி தவறி நீங்கிவிட்ட அம்பின் போக்கை நினைந்து கானவன் “இம்மலையில் தெய்வம் தோன்றி நின்றது ; மழை பெய்தல் அத்தெய்வத்தின் வீறு தணியுமாகலின் மலையை மழை வந்து சூழ்வதாக “ என்று மலை மேலதாகிய கடவுளை வழிபடும் பொருட்டுத் தன் சுற்றத்தோடு விரும்பி மகிழ்ந்து, எழுந்து மலைக்குப் பலியை இட்டு நீர் வளாவினான் மலை அப்பலியை உண்ணுமாறு நிற்கும். 

                          (கானவர் ஆமான் மீது எய்த அம்பு பிழைத்ததால்  மலைக் கடவுளுக்குப் பலியூட்டி மகிழ்வர் என்பது நாம் கருதிய தலைவனைக் கூடாது  நீக்கும் தடையை அகற்றத் தெய்வத்துக்குப் பலிக்கடன் நேர்வோம் என்பதை உணர்த்தியது)   

                                ( நிறம் - மார்பு. ; முள்காது - தங்காமல். ; பணைத்த - குறி தவறி நீங்கிய /பிழைத்த. ; பேண்மார் - வழிபடும் பொருட்டு. 

                                    .......................................தொடரும்...........................  

 

 

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக