சனி, 5 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்- 147

 

தன்னேரிலாத தமிழ்- 147

வற்றிய முலையில் பால் சுரத்தல்

வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி

இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி

வாடுமுலை ஊறிச் சுரந்தன

ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

ஒளவையார், புறநா. 295: 4 – 8

                      போர்க்களத்தில், படைத் திரளின் இடையில் வெட்டுண்டு உடல் சிதைந்து வேறுபட்டான் வீரன் ஒருவன். பின்னிட்டு ஓடாத கொள்கையினை உடைய அவ்வீரனுக்குத் தாயாகிய  இவள், சிறப்புக்குரிய தன் மகனின் மறமாண்பு கண்டு அன்பு மேலிட, அத்தாயின் வற்றிய முலைகளில் பால் ஊறிச் சுரந்தன.

                        இயல்பாகவே,  பிறந்த குழந்தை முதன்முதலாகத்  தாயின் முலைக் காம்பில் பால் உறிஞ்சும் போது, தாயின் உடலும் உள்ளமும்  உணர்ச்சி மேலிட பால் சுரக்கும்.

                    தாய்ப்பால் சுரப்பதற்குத் தாயின் உள்ளன்பு மிகவும் இன்றியமையாதது என்பது இப்பாடல்வழி அறியமுடிகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக