வெள்ளி, 20 மார்ச், 2026

தமிழமுது –241– தொல்தமிழர் இசை மரபு:101. ..குடியும் குரவைக்கூத்தும்

 தமிழமுது –241– தொல்தமிழர் இசை மரபு:101. 

          .குடியும் குரவைக்கூத்தும் 

 

                                       பத்துப்பாட்டு. 

 

10. மலைபடுகடாம்.   

 அரு குறும்பு  எறிந்த கானவர் உவகை  

திருந்துவேல் அண்ணற்கு விருந்து இறைசான்ம் என    

நறவுநாள் செய்த குறவர் தம் பெண்டிரொடு    

மான் தோல் சிறுபறை கறங்கக் கல்லென    

வான்தோய் மீமிசை அயரும் குரவை .”  

நல் எழில் நெடுதேர் இயவு வந்தன்ன  

ஒலிக்கும் கல் யாறு விடர் முழங்கு இரங்கு இச ’   318 324.--

 

     அழித்தற்கு அரிய  பகைவர் தங்கும் சிறிய அரண்களை அழித்ததிருந்து வேலினை உடைய நன்னனுக்குப் புதிதாகக் கொடுத்தற்கக் கைகொண்ட பொருள்கள் அமையும் எனக் கருதிச்சென்று  நா்காலையில் கள் குடித்த குறவர்கள்தம் மனைவியருடன் கூடி,்் மான் தோல் போர்த்த சிறு பறையைக் கல் என்னும் ஓசை உண்டாகுமாறு அடித்துவானைத் தீண்டும் உச்சி மலையில் ஆடும் குரவைக் கூத்தின் ஆரவாரமும்நல்ல அழகினை உடைய நெடிய தேர்கள் வழியிலே ஓடிவந்த தன்மையாக ஒலிக்கும் கல்லின் மேல்வரும்  ஆறுகள் முழைஞ்சிகளிலே வீழ்ந்து இணைந்து ஒலிக்கும் ஓசையும் .கானவர் மகிழ்ச்சியில் உண்டான ஆரவாரமாகும் 

ண்ணல் ன்னன் ; முழைஞ்சு - குகைகுறும்ப - பகைவர் தங்கும் சிற்றரண்.) 

...............................தொடரும் .................................. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக