திங்கள், 13 ஏப்ரல், 2026

தமிழமுது –263– தொல்தமிழர் இசை மரபு:123. ...பண்சுமந்த பாடல்கள்.

 தமிழமுது –263– தொல்தமிழர் இசை மரபு:123. நீட்சியும் -  வீழ்ச்சியும்ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - எழுச்சி ; பக்தி இலக்கியங்கள்பண்சுமந்த பாடல்கள் 

    திருஞானசம்பந்தர் 

      சைவசமய அடியார் திருக்கூட்டத்திற்குச் சில இயல்புகளால் தலைமை தாங்கும் பேறுபெற்றவர் திருஞானசம்பந்தர்இவர் பாடல்களில் இயற்கை அழகு மிகுதி ; பேரின்ப உணர்ச்சியை நல்கும் கவிதைகளை ஆணையிட்டு அவர் உரைப்பார். “ஞானசம்பந்தன் சொல் சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.; ஆணை நமதே.” முதலியன அவர்தம் முத்திரைக்குச் சில சான்றுகள் “வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழை என்றஞ்சிசில மந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே - இயற்கை ோக்குக்கு ஒரு சான்று. ”நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்”  என்று ுகழப்பெற்றவர் 

காதலாகிக் சிந்து கண்ணீர் மல்கி  

ஓதுவார்தமை நன்னெறிக்கு  உய்ப்பது   

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது   

நாதன் நாமம் நமச்சி வாயவே.”  

 எல்லாம் வல்ல பரம் பொருளேதங்களின் திரு நாமமாகிய ‘நமச்சிவாய’ எனும் மந்திரம் வேதம் நான்கினும் மெய்ப் பொருளாகும்அத்திரு நாமத்தை அன்பு மேலீட்டினால் கண்ணீர் மல்க ஓதும் நிலையை எளியேனுக்கு அருளுங்கள்அப்படி மக்கள் யாவரும் தி நன்னெறிப்படட்டும்துன்பமின்றி வாழட்டும்இதுவே எனது பிரார்த்தனை ஆகும் 

         மேலும்,  சம்பந்தர்க்கும் தமிழிசைக்கும் உள்ள தொடர்பினை ஆராய்வோம். 

................................தொடரும் .................................................  

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக