ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-15.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர்-காலம் :
தொல்காப்பியம் காலஎல்லைகளைக் கடந்து, செந்தமிழ்க்கடலின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. தொல்காப்பியர் காலத்தை வரையறுத்துக் கூறவல்லாரும் உளரோ என்று கருதும் அளவிற்குத்தான் அறிஞர்களின் ஆய்வுகள் காலந்தோறும் தோன்றிக்கொண்டிருக்கின்றன. பேராசிரியர் சிவா, சில ஆய்வு முடிவுகளைத் தொகுத்துள்ளார்.
1. தொல்காப்பியம் நான்கு வேதங்களையும் தொகுத்த வேதவியாசர் காலத்துக்கு முற்பட்டது என்பது நச்சினார்க்கினியர் கொள்கை........
2,தொல்காப்பியம் இடைச்சங்கத்திற்கு இலக்கணம் ; கடைச் சங்கத்தினிறுதிக்காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு, எனவே இன்றைக்கு 7300 ஆண்டுகட்கு முற்பட்டது என்பது இறையனார் களவியல் உரை கூறும் காலமாகும்.
3,தமிழ்நாட்டில் பருவங்கள் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று பகுக்கப்பட்டிருந்தன.. ஓராண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்த்து. தொல்காப்பியம் கார் காலத்தையே முதலில் கூறுகிறது (அகத்திணை-6) ஆவணி ஆண்டி முதல் மாதமாக இருந்த காலம் 5000, ஆண்டுகட்கு முன் என்று வானவியலார் கூறுவர். எனவே தொல்காப்பியம் 5000, ஆண்டுப் பழமையுடையது.
4. இரும்பு,பொன் முதலிய உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் கி.மு. ஐயாயிரத்துக்குப் பின்னாகும் ; தொல்காப்பியத்தில் உலோகங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆகவே கி.மு. ஐயாயிரத்திற்குப் பிற்பட்டது என்பர்.
5. ஐந்திரம் பாணினிக்கு முற்பட்டு வழங்கிய நூல், பாணினி காலம் கி.மு. 4ஆம் நூற்றாண்டு,எனவே தொல்காப்பியர் கி.மு. நான்குக்கும் முற்பட்டவர் என்பர்.
6. ி.பி. 2,5,6. ஆம் நூற்றாண்டுகளில் தொல்காப்பியம் தோன்றிற்று என்று கூறும் சிலரின் ஆராய்ச்சிகள் பிறழ்ச்சியுடையன. என்பார்.
தொல்காப்பியர் பாரத காலமாகிய கி.மு. 1500க்கு முற்பட்டு வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. களவியல் உரையிற் கண்ட ஆண்டுக் கணக்கின்படி நோக்குங்கால் இடைச்சங்கம் கி.மு 5320-இல் தொடங்கப்பெற்றமை புலனாதலின் தலைச்சங்கத்திறுதியிலும் இடைச்சங்க தொடக்கத்திலும் வாழ்ந்தவராகிய தொல்காப்பியனார் காலமும் அதுவே என்பதும் நன்கு துணியப்படும் என்க.”என்பது தொல்காப்பியர் காலத்தின் மேலெல்லையாகும். என்கிறார் அறிஞர் க. வெள்ளைவாரணனார்.
...........................................தொடரும்..........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக