ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-69- ஓர் அறிவியல் அறிஞர்.
எழுத்துக்களது பிறப்பு :
ஆய்வுரை. நச்சினார்க்கினியர் உரை:
பிறப்பியல் - நூற்பா 84.
அவ்வழி
பன்னீருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்.
பன்னிரண்டு உயிரும் தத்தம் மாத்திரை திரியாவாய் அவ்வுந்தியிடத்துப் பிறந்த மிடற்றின்கண் நிலைபெற்ற காற்றால் ஒலிக்கும் என்றவாறு.
அவற்றுள்
் அ ஆ வாயிரண் டங்காந் தியலும் -85.
முற்கூறிய பன்னிரண்டு உயிர்களுள் அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டும் அங்காந்து கூறும் முயற்சியால் பிறக்கும் என்றவாறு.
தெளிவுரை : ச.வே. சுப்பிரமணியன்
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன,
அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்புறல் உடைய. - 86.
இ ஈ எ ஏ ஐ என்னும் ஐந்து உயிர் எழுத்துகளும் முற்கூறியதுபோல் வாயை அங்காத்தலால் தோன்றும் மேலும் அவை மேற்பல்லின் அடியை நாவினது அடிவிளிம்பு சென்று பொருந்தப் பிறக்கும்.
உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும் - 87.
உ ஊ ஒ ஓ ஒள என ஒலிக்கும் ஐந்து உயிர் எழுத்துகளும் இதழ் குவித்துச் சொல்லப் பிறக்கும்.
தம்தம் திரிபே சிறிய என்ப. -88.
அவை ஒலிக்கும்போது சிறிய அளவில் வேறுபாடு ஏற்படலாம்.
ககார ஙகாரம் முதல்நா அண்ணம் - 89.
அடி நா, அடி அண்ணத்தைப் பொருந்த க, ங பிறக்கும்.
சகார ஞகாரம் இடைநா அண்ணம்.- 90.
இடைநா, இடை அண்ணத்தைப் பொருந்த ச, ஞ பிறக்கும். ..............................தொடரும்.........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக