தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -11.
தொல்தமிழர் முருகன் வழிபாடு ; ஆறுபடைவீடுகள்.
முனைவர் இரெ. குமரன்:
திருமுருகாற்றுப்படை . திரு ஏரகம்.- 4
அந்தணர் முருக வழிபாடு:
“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமைநல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல.” - நக்கீரர் 177 – 182.
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரைஉறு நறுமலர் ஏற்றி - பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்.” 187 – 189.
ஓதல் முதலிய அறுவகைத் தொழில்களச் செய்தலிலே வழுவாமல், உலகத்தார் மதிக்கின்ற பல்வேறு பழங்குடிப் பிறப்பினராய் 48 வருடங்கள் பிரமச்சரியம் அதன்பின் இல்லறவாழ்க்கை மூன்றுவகைத்தீயால் செல்வத்தையும் இரு பிறப்பினையும் முக்காலமும் பூணூலையும் புலராத ஆடையையும் அணிந்து, தலைமேல் குவித்த கையினராய் முருகப்பெருமானைப் புகழ்ந்து துதித்து சரவணபவ எனும் வேதமந்திரத்தை நாவால் பலமுறை ஒலித்து வழிபட்டனர்.
திருவேரகம் இதனை மலை நாட்டகத்தொரு திருப்பதிி என்றார் நச்சினார்க்கினியர் ; அருணகிரியார் சோழ நாட்டில் உள்ள சுவாமிமலை என்னும் தலமே ஏரகம் என்பார்.
.........................தொடரும்..........................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக