திங்கள், 30 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-24


தன்னேரிலாத தமிழ்-24

மழலைச் செல்வம்

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
 இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை…….. “ --- புறநானூறு.

மழலை இன்பம் தந்து, அறிவை மயக்கும் புதல்வரைப் பெறாதவர்க்குத் தாம் உயிர் வாழும் நாளில் இன்பமாகிய பயன் இல்லை ; அவ்வாழ்க்கை வெறுமை உடையதே,

ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின்
தேமொழி  கேட்டல் இனிது…” – கலித்தொகை.

 ஐயனே,  யாவரும் விரும்புகின்ற அழகினை உடையவனே..! அத்த,, அத்தா.. என்று கூறும் நினது இனிய மழலை மொழிகளைக் கேட்பது மிகவும் இனிதே.

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
 பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு
 அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை.” ----- புறநானூறு.

மழலை மொழி,  யாழோசை போல இசை இன்பம் தருவதில்லை ; காலத்துடன் பொருந்தி  வருவதில்லை ; பொருளும் அறிய இயலாது. ஆயினும் தந்தையர்க்குத் தம் புதல்வர் பேசும் மழலை மொழியில் அருள் பிறக்கும் ஆகவே இன்பமுடன் ஏற்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக